இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் - மத்திய அரசின் அறிவிப்புகள் என்னென்ன?
இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் - மத்திய அரசின் அறிவிப்புகள் என்னென்ன?
நான்காம் கட்ட ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளையுடன் நான்காவது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் எவையெல்லாம் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
ஜுன் 1 முதல் புதிய வழிமுறைகள் அமலுக்கு வரும். ஜுன் 8 முதல் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஜுன் 8 முதல் உணவகங்கள், மால்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி பயிற்சி நிலையங்கள் மாநில / யூனியன் பிரதேச அரசுகள் உடன் ஆலோசித்த பிறகு திறக்கலாம்.
நிலைமைக்கு ஏற்றவாறு தியேட்டர்கள், ஜிம், மெட்ரோ ரயில், சர்வதேச விமான சேவை ஆகியவை அனுமதிக்கப்படுவது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவை இன்று பொது வெளியில் நடமாடுவது தற்போது, போல தடை செய்யப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இருக்கும். இந்தப் பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம்.
தொடரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.
பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது
கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி. அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
போக்குவரத்து:
மாநிலங்களுக்கு இடையே மற்றும் வேறு மாநிலங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. முன் கூட்டிய இ-பாஸ் உள்ளிட்ட எந்த அனுமதியும் தேவை இல்லை.
எனினும், நிலைமைக்கு ஏற்ப மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பொது சுகாதாரம் தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கலாம்.
ஷார்மிக் சிறப்பு ரயில்கள், உள்நாட்டு விமானம், வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் விமான சேவை ஆகியவை இயங்கும்.
மாநிலம் / யூனியன் பிரதேச அரசுகள் எந்த ஒரு எல்லை தாண்டிய சரக்கு போக்குவரத்து சேவையை தடை செய்யக் கூடாது.
No comments: