Breaking

கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்தால்…




கான்டாக்ட் லென்ஸ்’ அணிந்தால்…

www.tamilsciencenews.in

கான்டாக்ட்
லென்ஸ்’ நேரடியாகக் கண்ணில் பொருத்தப்பட்டாலும் விழியுடன் தொடர்பு இருக்காது. விழியின் மேலுள்ள திரவத்தின் மீது மிதப்பது போல் அமைக்கப்படும்.
`கான்டாக்ட் லென்ஸ்’கள் இருவகைப்படும். அவை, கார்னியல் மற்றும் ஹாப்டிக் லென்ஸ்.
பார்வைக் கோளாறுகள் கான்டாக்ட் லென்ஸ் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றன. `அனிசோ மெட்ரோபியா’ என்பது இரு கண்களின் ஒளிச்சிதறலும் வேறுபட்டிருப்பதாகும்.

அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு ஒரு பக்கம் குழிந்த, மற்றொரு பக்கம் குவிந்த லென்ஸ் வைக்கப்பட வேண்டும்.
இந்த நோயாளிகள் மூக்குக்கண்ணாடி அணிந்தால் வேறு திசையில் பார்க்க வேண்டும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தால் இந்தக் குறை இருக்காது.
`கார்னியா’வுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இது கண்ணீரில் உள்ள காற்றின் மூலம் கிடைக்கிறது. ஆனால் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களின் கண்களுக்கு, கான்டாக்ட் லென்ஸ் மூலம் ஏற்படுத்தப்படும் தடையால் ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இந்நிலை, `ஹைபாக்சிக்’ எனப்படும்.
இந்த நிலை, கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையாகும். `ஹைபர் தைராய்டு’ நோய் உள்ளவர்களுக்கு இந்த நிலை பழகிக்கொள்ள கடினமாயிருக் கும். பழகும்வரை சிறிது எரிச்சலும், அரிப்பும் தோன்றவே செய்யும். அதை சகித்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Powered by Blogger.