Breaking

Facebook Update: முகநூல் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட தனது வலைதளத்தை டார்க் மோட் அம்சத்துடன் வெளியீடு..






Facebook Update: முகநூல் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட தனது வலைதளத்தை டார்க் மோட் அம்சத்துடன் வெள்ளியன்று வெளியிட்டுள்ளது. நிறுவனம் தனது தளத்தின் புதிய வடிவமைப்பை முதலில் F8 developer conference ல் 2019 ஆம் ஆண்டு காண்பித்தது. உண்மையில், முகநூல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிய எண்ணிக்கையிலான பயனர்களுடன் தனது புதிய அம்சத்தை சோதிக்க தொடங்கியது.
இப்போது புத்தம் புதிய டெஸ்க்டாப் பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு நேரலையில் கிடைக்கிறது. நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் அடுத்த சில நாட்களில் இது கிடைக்கும்.
முகநூலின் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெஸ்க்டாப் தளத்தில் புதிதாக என்ன உள்ளது.
புதிய வடிவமைப்பு டெஸ்க்டாப் பதிப்பை கைபேசி அனுபவத்திற்கு ஒத்ததாக ஆக்குகிறது. புதிய வடிவமைப்பில் வீடியோக்கள், விளையாட்டுகள் (Games) மற்றும் குழுக்களை (Groups) கண்டுபிடிப்பது எளிதாக உள்ளது என நிறுவனம் கூறுகிறது. முகநூலின் கைபேசி ஆப்-ஐ போல டெஸ்க்டாப் தளமும் எளிதில் லோடாகும் (load faster). புதிய வடிவமைப்பு Events, Pages, Groups, மற்றும் விளம்பரங்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது.
முகநூலின் புத்தம் புதிய வலைதளத்துக்கு எப்படி மாறுவது?

* முகநூலின் முகப்பு பக்கத்துக்கு செல்லவும். மேல் வலது மூலையில் உள்ள கீழ் அம்பு (down arrow) பொத்தானை தட்டவும்.
* 'Switch to new Facebook' என்பதை தேர்வு செய்யவும்.
* ஒரு வேளை டார்க் மோடை (dark mode) எனேபிள் (enable) செய்யவேண்டுமென்றால், கீழ் அம்பு பொத்தானை தட்டி Dark Mode toggle ஐ தட்டவும்.
கரோனா வைரஸ் தொற்று காலத்தில் முகநூல், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் பயன்பாடு இரட்டிப்பாகி உள்ளது.
புதிதாக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டெஸ்க்டாப் அனுபவத்தின் சிறப்பம்சமே புதிய டார்க் மோட் தான் அது கண் சேர்வை குறைக்கவும், readability of text மற்றும் better contrast ஐ கொடுக்கும். கடந்த மாதம் முகநூல் டார்க் மோடை முகநூல் Messenger க்கு அறிமுகப்படுத்தியது. முகநூலால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் ஆப்பிலும் டார்க் மோட் கடந்த மார்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

No comments:

Powered by Blogger.