4 மாவட்டங்களில் மீண்டும் முழு பொதுமுடக்கம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள், பணிக்கு வரத்தேவையில்லை
🔥🔥 4 மாவட்டங்களில் மீண்டும் முழு பொதுமுடக்கம்:
*கொரோனா பரவலை தடுக்க சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில், ஜூன் 19 முதல் மீண்டும் முழு பொது முடக்கம்.*
*முழு ஊரடங்கு நாட்களில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.*
*தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.*
*வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம்.*
*சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.*
*ஜூன் 21 மற்றும் 28 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில், முழு ஊரடங்கு, எந்த தளர்வும் இல்லை.*
*சென்னை காவல் எல்லையில் வசிப்பவர்களுக்கு, அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும்.*
*சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, ரூ.1000 வழங்கப்படும்.*
*மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும்.*
*மாநில அரசுத்துறைகள், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.*
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள், பணிக்கு வரத்தேவையில்லை.*
*அத்தியாவசியபி பொருட்கள் வாங்கும் மக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பொருட்களை வாங்க அறிவுரை.*
*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது, நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும்.*
*சென்னையில் இருந்து பிறமாவட்டங்கள் செல்ல, தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும்.*
*- தமிழக அரசு.*


No comments: