மறந்தும் சமையலுக்கு இந்த எண்ணெய்களை பயன்படுத்தாதீர்கள்'.. 'அப்படி பயன்படுத்தினால் ஆபத்து நிச்சயம்'..
மறந்தும் சமையலுக்கு இந்த எண்ணெய்களை பயன்படுத்தாதீர்கள்'.. 'அப்படி பயன்படுத்தினால் ஆபத்து நிச்சயம்'..
இந்த செய்தி தொகுப்பில் சமையலுக்கு எந்த வகையான எண்ணெய் வகைகளை பயன்படுத்த கூடாது என்பது பற்றி பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யில் அதிக ஆரோக்கிய பயன்கள் இருந்தாலும், அதில் அதிகளவில் உள்ள நிறையுற்ற கொழுப்புகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். மேலும் இதய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தாவர எண்ணெய்:
தாவரங்களில் இருந்து நேரடியாக எடுக்கப்படுவது தான் தாவர எண்ணெய். இந்த எண்ணெய் உணவிற்கு சுவை அளிக்கிறது என்பதற்காக நம்மில் பலர் இதில் உள்ள தீமைகளை கண்டு கொள்ளாமல் பயன்படுத்துகிறோம். இந்த வகை எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்த கூடாது.
பனைமர எண்ணெய்:
இந்த எண்ணெய்யின் விலை குறைவாக உள்ளது என்பதற்காக இந்த வகை எண்ணெய்யை பயன்படுத்தி விடாதீர்கள். ஏனென்றால், இந்த வகை எண்ணெயை பயன்படுத்தி வந்தால் இதய நோய் ஏற்பட்டு எளிதில் மாரடைப்பு உண்டாகும்.
நெய்:
தற்போது பெரும்பாலானோர் அடிக்கடி சமையலுக்கு நெய் சேர்க்கின்றனர். இவ்வாறு சேர்ப்பதால் நமது உடலில் கொலஸ்டெரால் அதிகரித்து இதய நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன.


No comments: