சிராய்ப்பு குணமாக மற்றும் தழும்பு நீங்க இயற்கை வைத்தியம் என்ன?
சிராய்ப்பு குணமாக மற்றும் தழும்பு நீங்க இயற்கை வைத்தியம் என்ன?
பதில் : குழந்தைகளோ, பெரியவர்களோ எங்கேயாவது விழுந்து விட்டாலோ, இதிலாவது தேய்த்துக் கொண்டாலோ, உடலில் சிராய்ப்பு ஏற்படும். இதை குணப்படுத்த, தழும்புகளை நீங்க இயற்கை வைத்தியம் உள்ளது.
பச்சை கற்பூரம், விளக்கு எண்ணெய், மஞ்சள் இவை மூன்றையும் சம அளவில் எடுத்து கலந்து அந்த சிராப்பின் மேல் தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் குணமாகும், அதேநேரம் தழும்பு சுத்தமாக நீங்கி விடும்.
" பச்சை கற்பூரம்" நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். விளக்கெண்ணெய் ஒரிஜினல் தானா என்று தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். கிழங்கு மஞ்சளை அரைத்து பயன்படுத்தினால் மிகவும் சிறப்பு, ஒருவேளை கிழங்கு மஞ்சள் கிடைக்கவில்லை என்றால் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சளை பயன்படுத்தலாம்.
சிராய்ப்பு குணமாகும் மற்றும் தழும்பு முற்றிலுமாக நீங்கும்.

No comments: