அனைத்து ரயில்களின் சேவைகளும், ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கால அட்டவணைப்படி இயங்கும் அனைத்து ரயில்களின் சேவைகளும், ஆக.,12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் மார்ச் 25 முதல் பயணியர் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டபின், ஜூன் 1 முதல் குறிப்பிட்ட மார்க்கங்களில் மீண்டும் துவங்கின. முதற்கட்டமாக, 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' விரைவு ரயில் உள்ளிட்ட, 100 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.இந்நிலையில், நாடு முழுவதும் நேர அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆக.,12ம் தேதி வரை இயக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.
இதனையடுத்து, ஆக.,12 வரை பதிவு செய்யப்பட்ட, அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments: