மன அழுத்தத்தால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!
மன அழுத்தத்தால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!
பல்வேறு பதட்டமான சூழ்நிலை மற்றும் டென்ஸனான மனநிலையில் சிலர் அதிக உணவு உட்கொள்வதை நாம் கவனித்திருக்கலாம். அதாவது ஒரு நபர் அதிக மனஅழுத்தத்தில் இருக்கும் போது அல்லது விடுபட முடியாத ஒரு சூழ்நிலையில் அகப்படும் போது அந்த நிலையில் இருந்து மீள்வது கடினமாகிறது. ஆகவே அந்த நிலையில் ஒரு ஆறுதல் பெறுவதற்காக உணவை நாடுகிறார். அவருக்கு பசி இருக்கிறதோ இல்லையோ அந்த காலகட்டத்தில் அவர் அதிக உணவை உட்கொள்கிறார்.
இந்த வகையில், மனஅழுத்தத்தில் இருக்கும் போது அதிக உணவு உட்கொள்ளும் ஒரு நிலை வழக்கமானதாக இருந்தாலும் உடலுக்கும் மனதிற்கும் இது பல்வேறு உபாதைகளை கொடுக்கிறது. நீடித்த மனஅழுத்தம் காரணமாக உடலில் கார்டிசால் என்னும் ஹார்மோன் சுரக்கிறது
இதனால் பசியுணர்வு அதிகரிக்கிறது. இந்த நிலையில் மனிதர்கள் அதிக உணவை குறிப்பாக கொழுப்பு அல்லது இனிப்பு உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். இந்த நிலையைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பலாம்.
மனதில் எழுப்ப வேண்டிய கேள்விகள்:
நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கும்போது வழக்கமாக உட்கொள்வதை விட அதிகம் உட்கொள்கிறீர்களா ?
உங்களுக்கு பசிக்காத நிலையிலும் சாப்பிடுகிறீர்களா?
மனஅழுத்த நிலையில் நீங்கள் எவ்வளவு உணவு உட்கொள்கிறீர்கள்?
நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வதற்கு உணவு உட்கொள்கிறீர்களா?
உணவு உங்களுக்கு ஒரு சிறந்த தோழனாக உள்ளதா அல்லது உணவு உட்கொள்ளும் போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா?
மேலே கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் உங்களுடைய பதில் "ஆம்" என்றால் நீங்கள் மனஅழுத்த நிலையில் உணவு உட்கொள்ளும் பாதிப்பைக் கொண்ட ஒரு நபர் என்று அறிந்து கொள்ள முடியும். நீங்கள் இந்த நிலையில் இருந்து விடுபட உங்களுக்கு எங்களுடைய சில குறிப்புகள் உதவும்.
உங்களை திசை திருப்ப நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
உணவுக்கான அவசியம் இல்லாத நேரத்தில் உடனடியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உண்டாகிறதா? இந்த நிலையில் உணவுத் தேடலில் இருந்து உங்களை விடுவிக்க மற்றொரு செயலில் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். உணவுத் தேடலில் இருந்து மீள்வதற்கு ஒட்டப்பயிற்சி அல்லது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இந்த வகை நடைபயிற்சி மற்றும் ஒட்டப்பயிற்சி மேற்கொள்வதால் உணவுத்தேடல் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்தப்படும். இதற்கு காரணம் இந்த வகை பயிற்சி மேற்கொள்வதால் என்டோர்பின் என்னும் மனஅழுத்த குறைப்பு ஹார்மோன் சுரக்கிறது. எனவே தினமும் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உணவுக்கான தேடல் குறைகிறது.
மாற்று யோசனையை உருவாக்குங்கள்
சாப்பிடுவதால் மனஅழுத்தம் குறைவதில்லை. மாறாக அது ஒரு புதிய அழுத்தத்தை உருவாக்குகிறது. மனஅழுத்த நிலையில் உங்கள் உடலில் கட்டப்பட்டிருக்கும் அதிகரித்த ஆற்றலை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். அதனால் உங்கள் எடை நிலையை அதிகரிக்கச் செய்யும் உணவு தேடலில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு வேறு சில தீர்வுகளை யோசிக்க வேண்டும். இப்படி செய்வதால் மனஅழுத்த நிலையில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் காலப்போக்கில் குறையலாம். அந்த நேரத்தில் சில புகைப்படங்களை பார்க்கலாம் அல்லது உங்கள் மனதை மாற்றக்கூடிய வேறு சில செயல்களில் ஈடுபாடலாம்.
ஆரோக்கிய சிற்றுண்டிகளை உட்கொள்ளுங்கள்
மனஅழுத்த நிலையில் கட்டாயம் உணவு உட்கொண்டு தான் ஆக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உயர்ந்த கொழுப்பு உணவுகள், பொறித்த உணவுகள், அதிக இனிப்பு உணவுகள் ஆகியவற்றை உண்ணுவதைத் தவிர்க்கவும். வால்நட்ஸ், பாதாம், ஆப்பிள் துண்டுகள் , கேரட் போன்ற ஆரோக்கிய சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சிற்றுண்டிகளில் எல்லா வகைகளும் உங்கள் எடை அதிகரிக்கச் செய்வதில்லை. மாறாக அவை உங்கள் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு அத்தகைய உணவுகளை உட்கொள்ளுங்கள். உங்கள் சிற்றுண்டிகளில் புரதத்தை இணைத்துக் கொள்ளுங்கள். பாதாம் போன்ற சிற்றுண்டி ஒரு ஆரோக்கியமான உணவாக பார்க்கப்படுகிறது.
உங்கள் உணவை தவற விட வேண்டாம்
ஆரோக்கியமற்ற பழக்கத்தில் ஒரு முக்கியமான பழக்கம் உணவை புறக்கணிப்பது. இந்த செயல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஒரு வேளை உணவு உட்கொள்ளாமல் புறக்கணித்து அடுத்த வேளை உணவுடன் சேர்த்து அதிக சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வதால் கூடுதல் எடை அதிகரிக்கும் மற்றும் இது ஒரு ஆரோக்கியமற்ற பழக்கமாகும். ஒரு வேளை உணவை புறக்கணிப்பதால் அடுத்த வேளை பசி எடுக்காத நிலையிலும் பசி உணர்வு அதிகரிக்கும். அதிக பசியுணர்வு இருக்கும் நேரத்தில் உங்கள் மனதை கட்டுப்படுத்த உங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட உணவு அட்டவணையை திட்டமிட்டு அதனை எந்த ஒரு மாறுபடும் இன்றி பின்பற்ற முயற்சிக்கலாம்.

No comments: