பிளஸ் 2 மாணவருக்கு, வீடியோ பாடங்களை, மடிக்கணினியில் பதிவு செய் ய ஏற்பாடு..
பிளஸ் 2 மாணவருக்கு, வீடியோ பாடங்களை, மடிக்கணினியில் பதிவு செய் ய ஏற்பாடு..
பிளஸ் 2 மாணவருக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பாடங்களை, மடிக்கணினியில் பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவலால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள், 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்துகின்றன. அரசு பள்ளிகளில், 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம், வீடியோ பாடங்கள் வாயிலாக, கற்பித்தல் நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதற்காக, அரசு பள்ளிகள், தங்களிடம் உள்ள, 'ஹைடெக் லேப்' உபகரணங்களான, 'லோக்கல் சர்வர், யு.பி.எஸ்., வைபை' ஆகியவற்றை, 'பவர் ஆன்' செய்து வைக்க உத்தரவிடப்பட்டது.
சென்னையிலிருந்து, பள்ளிகளில் உள்ள சர்வர்களில், வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. அதை, மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது 'பென்டிரைவ்' மூலம் பதிவிறக்கம் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இணையதள இணைப்பு இல்லாமல், வீடியோ பாடங்களை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகளிடம் வீடியோ பாடங்களை, 'பென்டிரைவ்' மூலம் பதிவு செய்து, மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments: