+2 மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு செய்வது / கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடுவது போன்ற சந்தேகங்களுக்கு தொடர்பு எண்..
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியாகின . மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரி படிப்பை தேர்வு செய்ய உள்ளனர். இந்நிலையில் கல்லூரி படிப்பு தேர்வு செய்வது குறித்து சந்தேகங்கள் இருந்தால் மாணவர்கள் தொடர்பு கொண்டு பேச வேண்டிய எண்களை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு செய்வது குறித்து சந்தேகம் மற்றும் கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடுவது குறித்து சந்தேகம் போன்ற சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பாடவாரியாக உள்ள வல்லுநர்கள் மாணவர்களின் சந்தேகங்களை தீர்ப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.


No comments: