மத்திய அரசின் 'பிட் இந்தியா' இணையதளத்தில், பள்ளிகள் பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'பிட் இந்தியா' இணையதளத்தில், பள்ளிகள் பதிவு செய்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.உணவு பழக்கம் உட்பட பல்வேறு காரணங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை சரி செய்வதற்கு, 'பிட் இந்தியா' என்ற செயல்பாடு மத்திய அரசால் கடந்தாண்டு துவக்கப்பட்டது.இதற்கான 'பிட் இந்தியா' இணையதளத்தில், இந்த திட்டம் குறித்த வினாடி வினா, ஒவ்வொரு மாதமும் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள், பள்ளிகளுக்கான பங்கு என பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன.இதில், பள்ளிகளுக்கான பங்கு என்ற பிரிவுகளில், அனைத்து பள்ளிகளும் பதிவிட வேண்டுமென, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமையாசிரியர்கள், பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும், விடுபட்ட பள்ளிகள், வரும் 25ம் தேதிக்குள், பதிவு செய்யவும், கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: