தேசிய வனவியல் விருது.... கோவை விஞ்ஞானி தேர்வு..
தேசிய வனவியல் விருது.... கோவை விஞ்ஞானி தேர்வு..
வனவியலில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான தேசிய விருதுக்கு, கோவை, இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன முதுநிலைமுதன்மை விஞ்ஞானி கண்ணன் வாரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக்குழுமம், இதற்கான அறிவிப்பைநேற்று வெளியிட்டது.கண்ணன் வாரியர், பல்லுயிர் பாதுகாப்புஆராய்ச்சிக்காக, 'ரோலா ராவ் விருது' பெற்றவர். உப்புத்தன்மை பாதிக்கப்பட்ட நிலங்களில், வளர்வதற்கு ஏற்றவுக்கு மரத்தின் மூன்று, 'குளோன்' ரகங்களை வெளியிட்டவர். 27 ஆண்டுகளாக, வனவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள கண்ணன் வாரியர், 232 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.வன மரபியலில் ஆராய்ச்சி செய்து, முனைவர் பட்டம் பெற்ற இவர்,கேரள வேளாண் பல்கலையில், பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி.,பட்டப்படிப்புகளில் முதலிடம் பெற்றவர்.ஆந்திரா மற்றும் கேரள வன மேம்பாட்டு கழகங்களில், ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.


No comments: