கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை உருவாக்கிய விஞ்ஞானிகள்
கண் புரையை அறுவைச் சிகிச்சை இல்லாமல் தடுக்கும் எளிய செலவு குறைவான முறையை ஐஎன்எஸ்டி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
கண்புரை என்பது பார்வைக் குறைபாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது. நமது கண்களின் லென்சுகளைப் பாதிக்கக்கூடிய கிரிஸ்டலின் புரதங்கள் பரவும்போது, அவை பெருகி, ஏற்படும் பால் ஊதா அல்லது பழுப்பு நிற படலம் கண் புரை எனப்படும். இது கடைசியாக லென்சுகளின் ஒளியைப் பாதிக்கும். எனவே, இந்தப் படலம் உருவாவதைத் தடுப்பது, ஆரம்ப கட்டத்திலேயே அதை அகற்றுவது, கண் புரை நோய்க்கான முக்கிய சிகிச்சை உத்தியாகும். இதனை நடைமுறைப்படுத்தும் முறைகள் , கண் புரையை கட்டுபடியான செலவில் தடுப்பதுடன், எளிதில் அணுகும் சிகிச்சையாகவும் இருக்கும்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு, வலியைக் குறைக்கவும், காய்ச்சல் அல்லது அழற்சிக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடியதுமான, நான்ஸ்டீராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்தான ஆஸ்பிரினில் இருந்து நானோகம்பிகளை உருவாக்கியுள்ளனர். இது கண்புரை நோய்க்கு சிறந்த சிறிய மூலக்கூறு அடிப்படையிலான நானோசிகிச்சையாக கண்டறியப்பட்டுள்ளது.
கண்புரை நோய் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு அதிக செலவாகும் என்பதால், அவற்றை அணுக முடியாத வளரும் நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு , அறுவைச் சிகிச்சையற்ற , செலவு குறைவான இந்தச் சிகிச்சை முறை பெரிதும் பயன்படும்.
No comments: