Breaking

கற்பூரத்தை கொண்டு தீராத சளிக்கு மருந்தாக பயன்படுத்துவது பற்றி அறிந்து கொள்வோம்..




கற்பூரத்தை கொண்டு தீராத சளிக்கு மருந்தாக பயன்படுத்துவது பற்றி அறிந்து கொள்வோம்..

கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. இந்த வாசனையைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த கற்பூரம் தான் இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.கற்பூரம் இந்த விக்ஸில் சேர்க்கப்படுவதற்கு அதன் நறுமணம் மட்டுமின்றி, மருத்துவ பண்புகளும் தான் காரணம்.

கற்பூரம் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். இது நெஞ்சு சளியை இளகச் செய்து, சளியை வெளியேற்ற உதவியாக இருக்கும். 4-5 துளிகள் கற்பூர எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, நெஞ்சுப் பகுதியில் நன்கு சில நிமிடங்கள் தேய்க்க வேண்டும்.


நாள்பட்ட இருமலை சரிசெய்வதற்கு, ஆவி பிடிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.அதுவும் நல்ல சூடான நீரில் சில துளிகள் கற்பூர எண்ணெய் சேர்த்து கலந்து, அந்நீரால் ஆவி பிடியுங்கள்.இதனால் நெஞ்சு வலி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பருக்களைப் போக்க கற்பூரம் உதவும். குறிப்பாக இது சருமத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, கருமையான தழும்புகள் ஏற்படாமலும் தடுக்கும்.அதற்கு 1 கப் சுத்தமாக தேங்காய் எண்ணெயை காற்றுப் புகாத ஒரு ஜாரில் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் இரவில் படுக்கும் முன் முகத்தை கிளின்சரால் கழுவிய பின், முகத்தைத் துடைத்து, இந்த எண்ணெய் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.பின்பு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் முகத்தை கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்

No comments:

Powered by Blogger.