Home
OCTOBER
அக்டோபர் -25. பிரான்சின் முதல் மனநல மருத்துவர், மனநல ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவர்- பிலிப் பீனல் மறைந்த தினம்.
அக்டோபர் -25. பிரான்சின் முதல் மனநல மருத்துவர், மனநல ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவர்- பிலிப் பீனல் மறைந்த தினம்.
21:20
Read
அக்டோபர் -25. பிரான்சின் முதல் மனநல மருத்துவர், மனநல ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவர்- பிலிப் பீனல் மறைந்த தினம்.
பிறப்பு:-
பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் ஏப்ரல்-20, 1745 இல் பிறந்தார். தந்தை போலவே இவரும் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். மான்ட்பெல்லியர் மருத்துவக் கல்லூரியில் 4 ஆண்டுகள் மருத்துவ மேற்படிப்பு படித்தார்.
மருத்துவத்தின் அன்றைய நிலை:-
சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறை.
கணிதம் பயின்றார். பிறகு மருத்துவக் கட்டுரைகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார்.
மனநல தாக்கம்:-
மனநலம் பாதிக்கப்பட்ட நண்பர் தற்கொலை செய்து கொண்டதால்,
மன நோய் குறித்த ஆய்வில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது.
பாரீஸில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது மனநோயின் இயல்புகள், சிகிச்சை குறித்த தனது கருத்துகளை முறைப்படுத்தத் தொடங்கினார்.
ஆராய்ச்சிகள்:-
பீஸெட் மருத்துவமனையில் மருத்துவராக 1793-ல் நியமிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளை 2 ஆண்டுகள் தொடர்ந்து தினமும் பலமுறை சந்தித்தார். அவர்களைப் பற்றிய குறிப்புகளை தொகுத்தார்.
கட்டுரைகள்:-
1794- இல் ‘மெமோர் ஆன் மேட்னஸ்’ என்ற கட்டுரையை வெளியிட்டார்.
தற்போது இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப் புத்தகமாக உள்ளது.
ஹாஸ்பிக் டி லா சல்பேட்ரயர் என்ற மருத்துவமனையில் தலைமை மருத்துவராக 1795-ல் நியமிக்கப்பட்டார்.
இறுதி வரை அங்கு பணிபுரிந்தார். மனநோய் குறித்த ஒரு அதிகாரப்பூர்வமான வகைப்பாடு புத்தகத்தை 1798-ல் வெளியிட்டார்.
மனநோய் விளக்கம்:-
மனநோய் என்பது தொடர்ச்சியான நோய் அல்ல. மனநோயாளிகளை குணப்படுத்த மனிதநேயம்தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். கட்டப்பட்டிருந்த சங்கிலிகளில் இருந்து மன நோயாளிகளை விடுவித்தார். அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடினார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு, சிகிச்சையில் மனிதாபிமான, மனோதத்துவ அணுகுமுறையை மேம்படுத்தினார்.
எல்லா மன நோய்களும் ஒன்றல்ல. மனச்சோர்வு, பித்து, புத்தி மாறாட்டம், பாமரத்தனம் என்று அதில் 4 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியாக கையாளப்பட வேண்டியவை என்று விளக்கினார்.
1801-ல் எழுதிய ட்ரீட்டஸ் ஆன் இன்சானிட்டி என்ற நூலில் தனது உளவியல் ரீதியான அணுகுமுறை பற்றி விவரித்துள்ளார்.
19-ம் நூற்றாண்டின் பிரெஞ்ச், ஆங்கிலோ, அமெரிக்க மனநல நிபுணர்களிடம் இந்த நூல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மறைவு:-
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் பிலிப் பீனல் அக்டோபர்-25, 1826 ஆம் ஆண்டு தனது 81 வயதில் மறைந்தார்.
அக்டோபர் -25. பிரான்சின் முதல் மனநல மருத்துவர், மனநல ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவர்- பிலிப் பீனல் மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:20
Rating: 5
Tags :
OCTOBER

No comments: