Home
OCTOBER
நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கிய இயற்பியலாளர்- ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மறைந்த தினம்.
நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கிய இயற்பியலாளர்- ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மறைந்த தினம்.
21:24
Read
நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கிய இயற்பியலாளர்-
ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மறைந்த தினம்.
பிறப்பு:-
ஜனவரி-11, 1786 ஆம் ஆண்டு,
இலண்டன் இங்கிலாந்தில் பிறந்தார்.
ஜோசப்பிற்கு சிறு வயதிலேயே, கண்ணாடிப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
இயற்பியலிலும் வானவியலிலும், இயற்கை அறிவியலிலும் நாட்டம் கொண்டிருந்தார்.
1800 ஆம் ஆண்டுகளில்
பள்ளிப் படிப்பை அரைகுறையாய் முடித்த ஜோசப் ஜாக்சன், தனது 14 ஆவது வயதில் தன் தந்தையுடன் இணைந்து லோத்புரி என்ற ஊரில் விற்பனையைக் கவனித்து வந்தார். அதில் அவர் சிறப்பாகச் செயல்பட்டதால் நான்கு ஆண்டுகளுக்குப்பின், அதன் பங்குதாரராகவும் ஆனார்.
கண்டுபிடிப்புகள்:-
உருப்பெருக்கி:-
ஓய்வு நேரங்களில் ஆன்மிக செயல்பாடுகளிலும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் குறிப்பாக, லென்ஸ்களைப் பற்றி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
நுண்நோக்கிகளும், தொலைநோக்கிகளும், 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாக, உருவங்கள் தெளிவாகத் தெரியாமல், கலங்கலாகத் தெரிந்தது வந்தன. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. இயற்கையில் கண்ணாடிப் பொருட்களில் ஆர்வமுடைய ஜாக்சன் உருப்பெருக்கியின் 'அபரேஷன்' (aberration) எனப்படும் உருவம் மங்கலாகத் தெரியும் பிரச்சினைக்கு முடிவு கட்டினார். எனவே, 1826 ஆம் ஆண்டு,
நுண்ணோக்கியை உருவாக்கினார்.
அதில் மேம்படுத்தப்பட்ட லென்ஸ்கள் மூலம் தெளிவாக அருகில் உள்ள பொருட்களையும், தொலைவிலுள்ள பொருட்களையும் பார்க்க வகை செய்தார். மேலும் நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்
கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின், உயிரியல் துறை
மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது.
தனிப்பட்ட முறையில் திசு அமைப்பியல் குறித்த பல ஆராய்ச்சிகளுக்கும் வழிவகுத்தது.
1830-ல் சொந்தமாக லென்ஸ்களை உருவாக்கத் தொடங்கினார். அதன் மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை கண்ணாடி சாதனங்கள் செய்பவர்களுக்கும் கற்றுத் தந்தார்.
முதன் முதலில் இரத்த சிவப்பணுவை உருப்பெருக்கியில் கண்டும், மற்றவர்களுக்கும் காண்பித்தார். மேலும் இவர் உருவாக்கிய நுண்ணோக்கி இலண்டன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான அறிவியலாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். தான் கண்டறிந்ததை இவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இவரது இந்த ஆராய்ச்சி, ஹாட்கின்ஸ் (Hodgkin’s) உட்பட பல நோய்களைக் கண்டறிவதற்கு வழிவகுத்தது. 1943-ல் டெலஸ்கோப், மைக்ரோஸ்கோப் குறித்த தனது கண்டுபிடிப்புகளை கட்டுரையாக எழுதினார்.
மறைவு:-
தனது ஆர்வத்தாலும், திறமையாலும்,
சர்வதேச இயற்பியல் அறிஞர், உயிரியல் துறையை மேம்படுத்தி சாதனை படைத்த இவர்,
அக்டோபர்- 24, 1869 ஆம் ஆண்டு
அப்டனில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
1832 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராயல் கழகத்தில் (fellowship of the Royal Society) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நுண்ணோக்கி உருப்பெருக்கியை உருவாக்கிய இயற்பியலாளர்- ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:24
Rating: 5
Tags :
OCTOBER

No comments: