இன்று. செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டூனாந் அவர்களின் நினைவு தினம்..
அக்டோபர் 30, வரலாற்றில் இன்று.
செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டூனாந் அவர்களின் நினைவு தினம் இன்று.
ஜீன் ஹென்றி டூனாந் சுவிட்ஜர்லாந்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்!!!
ஒரு இடத்தை வாங்கி அதில் விவசாயம் செய்தும் பண்ணை நடத்தியும் தன் தந்தையைப்போல் பெரும் செல்வந்தர் ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார்.
அந்த பண்ணைக்கு தேவையான தண்ணீரை ஒரு குழாய் மூலம் கொண்டுவர வேண்டிருந்தது.
பண்ணைக்கு பக்கத்தில் இருந்த நிலப்பகுதியோ பிரஞ்சு அரசாங்கத்திற்கு சொந்தமான இடம்.
எனவே அங்கு குழாய் போட பிரஞ்சு அரசாங்கத்தின் அனுமதியை அவர் பெற வேண்டியிருந்தது.
பல முறை பிரஞ்சு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டும் பலன் கிட்டாததால்
அப்போது பிரஞ்சு ஆட்சி புரிந்த மூன்றாம் நெப்போலியனை நேரில் சந்தித்து அனுமதி பெற முடிவு செய்தார்.
அந்த முடிவுதான் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.
அந்த சமயம் போர் நடந்துகொண்டிருந்தது.
நெப்போலியனை சந்திக்க இத்தாலி சென்றார்.
நெப்போலியனை சந்திக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியிருப்பதால் தன்னுடன் நிறைய பணத்தையும் அவர் கொண்டு சென்றிருந்தார்!!!
போரினால் போகும் வழியிலேயே பாதைகள் துண்டிக்கப்பட்டன.
எப்படியோ போர் நடைபெற்ற இடத்தை அடைந்தார்.
ஒரு மலை உச்சியில் இருந்து அவர் கண்ட காட்சிகள் அவரை கலங்கடித்தது.
போர்க்களத்தில் ஏராளமான மக்கள் இறந்தனர்.
காயமடைந்த மக்களுக்கு
முதல் உதவி செய்ய துவங்கினார்.
தான் கொண்டு வந்திருந்த பணத்தை கொண்டு மருத்துவர்களை வரவழைத்தார்.
என்ன வேலைக்காக வந்திருந்தோம் என்பதை சுத்தமாக மறந்தார்.
வீரர்கள் கூறிய விபரங்களை எழுதி வைத்துகொண்டு அவர்களது குடும்பத்திற்கு தகவலை அனுப்பினார்.
பின்னர் தனது நாட்டிற்கு திரும்பினார்.
போரில் தான் கண்ட காட்சிகளையும் வீரர்கள் பட்ட துன்பங்களையும் புத்தகமாக எழுதினார்.
உலகில் எங்கு போர் நடந்தாலும் உதவியின்றி வீரர்கள் இறக்கக் கூடாது என்று முடிவு செய்தார்.
போரில் காயப்
படுகிறவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளை அவர் முன்வைத்தார்.
இந்த பரிந்துரைகள் 16 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி உருவானதுதான் செஞ்சிலுவைச் சங்கம்.
1864ஆம் ஆண்டு ஸ்விஸ் நாட்டு நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் இந்த அமைப்பை உருவாக்க அதிகாரபூர்வமாக 12 நாடுகள் ஒப்புக்கொண்டன. அடுத்து வந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து பல்வேறு நாடுகள் இந்தச் சங்கத்தில் இணைந்தன.
தன் சொத்துக்களை விற்று இந்த இயக்கத்தை உருவாக்கினார் டூனாந்.

No comments: