சுத்துதே பூமி ...சிறிய விளக்கம்...
சுத்துதே பூமி ...சிறிய விளக்கம்...
“பூமி நொடிக்கு 30 கிலோமீட்டர் வேகத்துல சுத்துதுன்னு கலாய்க்கிறீங்களா சார்.”
“இல்லப்பா, நிஜம் தான் தம்பி “
.”அதெப்படிசார்.நம்ம கொஞ்சம் நகர்ந்தாலே கண்டுபிடிக்க முடியும் போது, இவ்வளவு வேகத்துல பூமி சுத்தறது நமக்குத் தெரியாதா சார்.”
“இல்லப்பா, ஒரு உதாரணம் சொல்றேன் கேளு. அப்ப ஒத்துக்கறயா பாப்போம். “
“சொல்லுங்க சார்”.
“நீ ஒரு கார்ல உட்கார்ந்து இருக்கே. பக்கத்து கார்ல உன் நண்பன். நீ அவனோட ஜாலியாப் பேசிண்டு இருக்கற போது உன்னோட கார் கிளம்புதுன்னு வச்சுக்க. அப்ப உனக்கு என்ன. தோணும். “நண்பா,உன் கார் கிளம்புது, நாளைக்குச் சந்திப்போம் “ அப்படீன்னு தானே சொல்லு வே”.”
“மத்த காரெல்லாத்தையும் பாக்கற போது தான் உனக்குத் தெரியும், கிளம்பினது உன்னோட கார்ன்னு!”
“ஆமாம் சார்.ஒத்துக்கிறேன். எப்படி சார் இந்த மாதிரி “
“இதுக்கு விளக்கம் சொல்லணும்னா , “FRAME OF REFERENCE” அப்படின்னு “குறுக்கிட்டு சட்டம்” என்ற தத்துவம் ஒன்றைப் பத்தி தெரிஞ்சுக்கணும். அதாவது எது, எதப்பத்தி இருக்கு? அப்படிங்கிறது முக்கியம். பூமி இவ்வளவு வேகத்துல சுத்துறது நமக்குத் தெரியாததுக்கு காரணம் நாம நிலையா இருக்கோம்ன்னு நாம நினைச்சுண்டு இருக்கோம். பக்கத்துல இருக்கிற பொருட்கள் தான் நகருவது போல நமக்குத் தெரியுது. அப்படியில்லாம நாம வேறு ஒரு கிரஹத்துல இருந்து பூமிய பாத்தா அப்ப தெரியும் பூமி உண்மையிலேயே சுத்துதுன்னு .”
“ஆமாம் சார், நீங்க சொல்றது சரிதான். “
“ஆங்கிலத்துல இதனை ‘Relativity’ என்பார்கள். அது மட்டும் இல்லை, நாம கார்லயோ, ரயிலிலோ செல்லும் போது நம்மோடு கூடவே அங்கே இருக்கும் காற்று, பறக்கும் பறவை ஆகியவைகள் கூட அதே வேகத்துல நகர்ந்துண்டு இருக்கும். “
“அப்ப எப்படி சார் இந்த மாதிரி போறதுங்கறதை தெரிஞ்சுக்கிறது?”
“நல்ல கேள்வி கேட்டே. டிரைவர் திடீரென்று ப்ரேக் போடறார்ன்னு வச்சுக்க, அப்ப நீ என்ன பண்ணுவே? “
“சடார்ன்னு முன்னாலே போய் எதுலயாவது போய் மோதிப்பேன் சார்.”
“கரெக்ட். அப்ப தான் உனக்குத் தெரியும். அதாவது விசையில ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மட்டும் தான் உனக்குத் தெரியும். “
“பூமியில அத எப்படி தெரிஞ்சுக்கிறது சார்? “
“பூமி சுத்தும் நேரத்துல மாற்றம் ஏற்பட்டால் தால் அத தெரிஞ்சுக்கலாம். ஆனா அது நடக்கிறது ரொம்ப அறிது. காரணம் பூமி தன்னோட வேகத்தை சிறிதளவு மாத்தினாக்கூட பல விளைவுகள் ஏற்படும். “
“அப்படி என்ன சார் எற்படும் “.
“அது பெரிய கதை.அதப்பத்தி இன்னொரு நாள் சொல்றேன்.”

No comments: