யார் யார் இரத்த தானம் செய்யலாம்? தெரிந்து கொள்வோம்!!..
யார் யார் இரத்த தானம் செய்யலாம்? தெரிந்து கொள்வோம்!!..
*_நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண், பெண்._*
*_18 வயதுக்கு மேல் 60 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள்._*
*_குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும்._*
*_இரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இயல்பான இரத்த அழுத்தமும் இருக்க வேண்டும்._*
*_எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்?_*
*_ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும்,_*
*_பெண்கள்_*
*_நான்கு மாதத்திற்கு ஒரு முறையும்_*
*_இரத்த தானம் செய்யலாம்._*
*_இரத்ததானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?_*
*_10 நிமிடம்._*
*_இரத்த தானத்திற்குப் பிறகு எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும்?_*
*_20 நிமிடம்._*
*_இரத்த தானத்தில் எவ்வளவு இரத்தம் எடுக்கப்படுகிறது?_*
*_350 மில்லி._*
*_(நம் உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது)_*
*_எடுக்கப்படுகிற_*
*_இரத்தம் திரும்ப_* *_உடலில் உற்பத்தி ஆகிவிடும்._*
*_இரத்த தானத்திற்காக எடுக்கப்பட்ட இரத்தம் எவ்வளவு நாள் கழித்து உடலில் உற்பத்தி ஆகும்?_*
*_10 லிருந்து 21 நாட்களில்._*
*_இரத்த தானம் ஏன் கொடுக்க வேண்டும்?_*
*_நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 120 நாட்கள் தான் உயிரோடு இருக்கும்._*
*_பின் தானாகவே அழிந்து புதியது தோன்றும். நீங்கள் இரத்தம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இதுதான் செயல்._*
*_ஆக அழிந்து பின் திரும்ப வரப்போகிற ஒன்றை_* *_மற்றொருவருக்குக் கொடுத்து_*
*_உயிர் காப்பது_*
*_நல்லதுதானே?_*
*_இரத்ததானம் கொடுக்க சரியான நேரம் என்ன?_*
*_நன்றாக உணவு சாப்பிட்டு, பின் ஒன்றரை மணிநேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது._*
*_தானம் செய்வதற்கு முன் மோர் போன்ற திரவங்களைக் குடிப்பது நல்லது._*
*_சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?_*
*_உதவிக்கு கீழே கொடுக்கப்பட்ட லிஸ்ட்டை பயன்படுத்துங்கள்._*
*_சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு _ கொடுக்கலாம்._*
*_ஆஸ்துமா _ மூச்சுத்திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்._*
*_ஆஸ்துமாவிற்காக கார்டிஸோன் மருந்து சாப்பிடுகிறவர்கள் _ வேண்டாம்._*
*_குழந்தை பிறந்த பிறகு 6 மாதம் ஆன தாய்மார்கள் _ கொடுக்கலாம்._*
*_அபார்ஷன் ஆனவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்._*
*_குழந்தைக்குப் பால் கொடுப்பவர்கள் _ பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு கொடுக்கலாம்._*
*_பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்._*
*_சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்_*
*_பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் _ 1 மாதம் கழித்துக் கொடுக்கலாம்_*
*_பல்பிடுங்கிய பின் _ 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்._*
*_இதய நோய்கள் _ வேண்டாம்._*
*_இரத்த அழுத்த நோய் _ கொடுக்கும்போது இரத்த அழுத்தம் சரியான அளவில் இருந்தால் கொடுக்கலாம்._*
*_வலிப்பு நோய் _ மருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் வேண்டாம்._*
*_மருந்து நிறுத்தி 2 வருடங்கள் வலிப்பு இல்லை என்றால் கொடுக்கலாம்._*
*_தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் _ 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்._*
*_நாய்க்கடி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்றவர்கள் _ 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்._*
*_மஞ்சள் காமாலை வந்தவர்கள் _வேண்டாம்._*
*_மலேரியா _ 3 மாதங்களுக்குப் பிறகு._*
*_காசநோய் _ 5 வருடங்கள் வேண்டாம்._*
*_மாத்திரைகளை சில காரணங்களுக்காகச் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?_*
*_சாலிசிலேட் மாத்திரையை கடைசி மூன்று நாட்கள் சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது._*
*_ப்ராஸ்டேட் பிரச்னைக்காக ஃபினஸ்டிரேட் மாத்திரை சாப்பிடுகிறவர்கள் கொடுக்க வேண்டாம்._*
*_நீரிழிவு மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்தக்குழாய் கோளாறு இல்லை என்றால் கொடுக்கலாம்._*
*_இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கொடுக்க வேண்டாம்._*
*_ஆன்டிபயாடிக் மாத்திரை சாப்பிட்டால் 5 நாட்களுக்குப் பிறகு கொடுக்கலாம்._*
*_இதயக் கோளாறு மாத்திரைகள், வலிப்பு நோய் மாத்திரைகள், தைராய்ட் நோய் மாத்திரைகள், இரத்தம் உறையாமலிருக்க டிஜிடாலிஸ், டைலான்டின் போன்ற மாத்திரை சாப்பிடுகிறவர்கள் இரத்த தானம் செய்யக் கூடாது._*
*_இரத்ததானம் கொடுத்தபின் என்ன செய்யக் கூடாது?_*
*_நல்ல திரவ உணவை அருந்துங்கள்._*
*_ஹெவி உணவு வேண்டாம்._*
*_ஒரு மணி நேரத்திற்கு புகை பிடிக்கக் கூடாது._*
*_3. 6 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது._*
*_இரத்தம் எடுத்த இடத்தில் அழுத்தி வைக்கப்பட்ட பஞ்சை 5 மணிநேரம் எடுக்க வேண்டாம்._*
*_உதிரம் கொடுப்போம்_*
*_உயிரை காப்போம்...

No comments: