SCOPE WORKSHOP 2024
SCOPE WORKSHOP 2024
நாள்: 12.10.2024, 13.10.2024
இடம்: ஜான்சன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி , கருமத்தாம்பட்டி , கோவை
தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை , அரசு மாதிரிப் பள்ளி மாணவர்கள் மனதில் அறிவியல் மனப்பான்மை, அறிவியல் ஆர்வம் ஏற்படுத்தும் விதத்தில், அரசு மாதிரிப் பள்ளி கருத்தாளர்களுக்கான மாநில அளவிலான
SCOPE WORKSHOP பயிற்சி அக்டோபர் 12, 13 தேதிகளில் கோவை, கருமத்தம்பட்டி, ஜான்சன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் சார்பாக அரசு மாதிரிப் பள்ளி மாவட்ட கருத்தாளராக நான் கலந்துக் கொண்டேன்.
இப் பயிற்சியில் ஒலி மற்றும் ஒளி பயன்பாடுகளைக் கொண்டு இயங்கும் 8 விதமான கற்பித்தல் துணைக்கருவிகள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.
கீழ்கண்ட கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்க தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி (TASS) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது
1 GYROSCOPE
2. SHEREOSCOPE
3 . KALE IDOSCOPE
4. STETHOSCOPE
5. MICROSCOPE
6. FOLDSCOPE
7. TELESCOPE
8. PERISCOPE
மேலே உள்ள கருவிகளில் ஒலி, மற்றும் ஒளியின் பண்புகளான
ஒளி எதிரொளித்தல்
ஒளி விலகல்
ஒளிச்சிதறல் கோட்பாடுகள்
சார்ந்த விதிகள் , அமைப்பு, செயல்படும் விதம் மிகச் சிறப்பாக TASS அமைப்பு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கருவிகள் மாதிரி கொண்டு வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல் மற்றும் கணிதம் மீது ஈர்ப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை .... இதன் மூலம் இளம் மாணவ விஞ்ஞானிகளை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் ...
No comments: