மார்ச் 21 - உலக டவுன் சிண்ட்ரோம் தினம்.(World Down Syndrome Day)
டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது.இந்த நோயானது மனித செல்லுக்குள்,குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது.
இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.
டவுன் சிண்ட்ரோம்’ -ஒரு பார்வை..
‘டவுண் சிண்ட்ரோம்’ ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைப்பது தவறு… இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது.
மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.
டவுன் சிண்ட்ரோம் பாதித்த குழந்தையை அடையாளம் காணுதல்:
⭕தட்டையான முகம்,
⭕சரிவான நெற்றி,
⭕கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல்,
⭕தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பர்.
⭕மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று ரேகைக்கு பதில் ஒரு ரேகையுடன் இருப்பர்.
காரணங்கள்:-
பொதுவாக, உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும், மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும். இவை, ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாக்கத்தில், தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும், 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக, 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும்.
இந்த குரோமோசோம் இணைவின்போது, தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும், 21-வது குரோமோசோமுடன், அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால், 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு செல்லிலும், 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வு தான், டவுண் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத்தன்மை இருக்கும் என்பதால், தமிழில் இது, ‘மன நலிவு’ எனப்படுகிறது.
கண்டறியும் முறை:-
இவர்களுக்கு, இயல்பான தசை உறுதி குறைந்து, தளர்வாக இருக்கும்.
பிறக்கும்போது எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும்.
தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறிதாக இருக்கும்.
காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக் கொண்டும் காணப்படும்.
டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி நிலை:-
❗சீரானதாக இருக்காது, இவர்களின் உடல், மன வளர்ச்சி, மற்ற குழந்தைகளைவிட குறைவாகவே இருக்கும்.
❗இந்தக் குழந்தைகள் தவழ்வது, உட்காருவது போன்றவற்றைச் செய்ய, மற்றக் குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிக காலம் எடுத்துக் கொள்வர்.
பரிசோதனை முறைகள்:-
🔆 டி.என்.ஏ., பரிசோதனையுடன் இணைந்த கூட்டுப் பரிசோதனை மூலம், குழந்தைக்கு மன நலிவு இருப்பதைக் கருவிலேயே உறுதி செய்யலாம்.
🔆 ரத்தப் பரிசோதனையில், தாயின் ரத்த மாதிரி பரிசோதித்து அறியப்படும்.
🔆மீயொலி பரிசோதனை மூலம், குழந்தையின் பின் கழுத்து பகுதி ஆராயப்படும். அங்கே இயல்புக்கு மாறான தன்மையும், அதிக அளவில் திரவமும் இருந்தால், குழந்தைக்கு மன நலிவு இருப்பது உறுதி செய்யப்படும்.
பொது வாழ்க்கை முறையை மேற்கொள்ளுதல்:-
🔅இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள், பொதுப் பள்ளிகளில் படித்து, தங்கள் வாழ்க்கைப் பாதையை நல்லவிதமாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், மன நலிவு குறித்து பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.
🙏 க. ஜெய்சீலன்,அறிவியல் ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப் பள்ளி, பெத்லேகம்-ஆம்பூர், வேலூர்-மாவட்டம்.
📲செல்:8122121968🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
jaicjoan@gmail.com
No comments: