🌴 இன்று:- மார்ச்-21.🌴 🌴 உலக காடுகள் தினம். (World Forestry Day)🌴
🌴 ஐரோப்பா கூட்டமைப்பு நவம்பர் 1971இல் கூடியது. இந்த அமைப்பு மார்ச் 21ஐ உலக காடுகள் தினமாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டது.
🌴 இதனை உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
🌲 காடுகள்:🌲
🌴 மரங்களும், மற்ற தாவரங்களும் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு எனப்படுகிறது.
🌴 காடு உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.
🌴 நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன.
🌴 ஏன் காடுகள் தேவை:🌴
🌿 காடுகள் என்பவை, வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை. இது வாழ்க்கை கட்டமைப்பில் (உயிர்க்கோளம்) ஒன்று. மரங்களுக்கும், காடுகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது.
🌿 காடுகளின் உதவியால் தான், நாம் சுவாசிக்க முடிகிறது. இதைத் தவிர நமது வீடுகளிலும், பொது இடங்களில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்தும் தப்பித்துக் கொள்ள மரங்களின் நிழலை தேடிச் செல்கிறோம்.
🌿 காடுகள் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன.
🌿 தட்ப வெட்ப நிலை சீராக இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன.
🌿 ஈரப்பதத்தை தக்க வைத்து வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டு தீயினால் மரங்கள் மரம் அழிவதை தடுக்கிறது.
🌴 நாம் செய்ய வேண்டியது:-🌴
🌴 அன்றாட வீட்டு தேவைக்காக மரங்கள் வெட்டுவதை தவிர்த்தல்.
🌴 விளை நிலம், வீடு கட்ட பட்ட நிலமாக மாற்றுவதை தவிர்த்தல்.
🌴 உலக வனத்துறை சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது, 10 மரங்கள் நடப்பட வேண்டும்.
🌴 பல வழிகளில் மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும் பயன்படும் காடுகளை, பாதுகாக்க வேண்டும்.
🌴 புதிதாக காடுகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரின் வீடுகளில் ஒரு மரம் வளர்க்க வேண்டும்.
🌴 ஏற்கனவே இருக்கும் மரங்களையும் பராமரித்தால், பூமிக்கு தேவையான காடு நிலைப்பெறும்.
🌴 இந்திய பொருளாதாரம், விவசாயத்தையே சார்ந்துள்ளது. இதற்கு காடுகளை பாதுகாப்பது அவசியம்.
🍀 மரம் வளர்ப்போம்!
🍀 இருக்கும் மரங்களை பாதுகாப்போம்!!
🍀 காடுகளின் அவசியத்தை அனைவர்க்கும் எடுத்துரைப்போம்!!
☘☘☘☘🍀☘🍀🍀☘
🙏 க. ஜெய்சீலன்,
அறிவியல் ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப் பள்ளி, பெத்லேகம்-ஆம்பூர்,
வேலூர்-மாவட்டம்
செல்:8122121968
☘☘☘☘☘☘☘☘☘
No comments: