Breaking

அறிவியல் பாடல்கள்:- 05. தஞ்சாவூர் பொம்மை பற்றிய பாடல்..


🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶

அறிவியல் பாடல்கள்:- 05.
தஞ்சாவூர் பொம்மை
🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶

தஞ்சாவூர் பொம்மையாம்

தலையாட்டும் பொம்மையாம்

அடிபெருத்த பொம்மையாம்

ஆடி ஆடி ஓயுமாம்

தஞ்சாவூர் பொம்மையைத்

தள்ளிக் கீழே விட்டாலும்

தள்ளாடி ஆடுமாம்

தலைநிமிர்ந்து நிற்குமாம்

அழுதபிள்ளை வாய்மூட

அம்மாவுக்கு உதவுமாம்

அறிவியலைப் புகட்டிட

ஆசானுக்கும் உதவுமாம்!

சாய்ந்து சாய்ந்து ஆடியே

சரியாய்த் தானே அமருமாம்

சமநிலையைப் போதிக்க

சான்றான பொம்மையாம்.
🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶

No comments:

Powered by Blogger.