Home
JUNE
ஜூன்-28.நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கணித இயற்பியலாளர், அணு மையத்தின் அணுக்கரு ஷெல் மாதிரியை முன்மொழிந்தவர்- மரியா கோப்பெர்ட் மெயர் (Maria Goeppert Mayer) பிறந்த தினம்.
ஜூன்-28.நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கணித இயற்பியலாளர், அணு மையத்தின் அணுக்கரு ஷெல் மாதிரியை முன்மொழிந்தவர்- மரியா கோப்பெர்ட் மெயர் (Maria Goeppert Mayer) பிறந்த தினம்.
20:05
Read
இன்று பிறந்த நாள்:- ஜூன்-28.
நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கணித இயற்பியலாளர்,
அணு மையத்தின் அணுக்கரு ஷெல் மாதிரியை முன்மொழிந்தவர்-
மரியா கோப்பெர்ட் மெயர் (Maria Goeppert Mayer) பிறந்த தினம்.
பிறப்பு:-
போலந்து
கடோவிஸ் இல் ஜூன்-28, 1906-ல் பிறந்தார்.
சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கி, கணித வல்லுநராக விரும்பினார்.
நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று கோட்டின்ஜென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.
பிறகு இயற்பியல் மீது ஆர்வம் திரும்பியது.
திருமணத்துக்குப் பிறகு 1930-ல் அமெரிக்காவில் குடியேறினார். மேக்ஸ் பார்ன் வழிகாட்டுதலில் கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
‘ஃபோட்டான்களின் உள்ளீர்ப்பு’ குறித்த கோட்பாடுகளை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார்.
தகுதிகள் இருந்தும் பெண் என்பதால் விரிவுரையாளர் பணி மறுக்கப்பட்டது. ஆனாலும், ஆய்வு மேற்கொள்வதற்காகவே சம்பளம் வாங்காமல் பணிபுரிய முன்வந்தார்.
எட்வர்டு டெல்லருடன் இணைந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டார்.
ஜெர்மனி திரும்பியவர், மேக்ஸ் பார்னுடன் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
கணவருடன் இணைந்து இயந்திரவியல் பற்றிய பாடநூலை எழுதினார்.
சாரா லாரன்ஸ் கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அறிவியலாளர் ஹெர்ஸ்ஃபெல்ட் மற்றும் கணவரின் உதவியுடன் வேதி இயற்பியல் துறையில் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல கட்டுரைகளை வெளியிட்டார்.
ஆய்வுகள்:-
கரிம மூலக்கூறு நிறங்கள் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். ஹெரால்டுடன் இணைந்து யுரேனிய ஐசோடோப்களைப் பிரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார்.
மேஜிக் எண்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஜென்சனு டன் இணைந்து அணுக்கரு கூடு குறித்த நூலை எழுதினார்.
பதவிகள்:-
சிகாகோ பல்கலைக்கழகத்தில் அணுக்கரு பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அர்கோன் தேசிய ஆய்வுக்கூடத்தில் பகுதிநேர ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராக 1960-ல் நியமிக்கப்பட்டார்.
விருதுகள்:-
எட்வர்டு டெல்லருடன் இணைந்து விண்வெளியில் சிறுவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அப்போது, அணுக்கரு கூடு அமைப்பின் மாதிரியை உருவாக்கினார். இதற்காக 1963-ல் ஜென்சன், பால் வைனர் ஆகிய இருவருடன் இணைந்து இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மறைவு:-
அன்றைய சூழலில்
மிகவும் கஷ் டப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்ட இவர், பிப்ரவரி -20, 1972 தனது 65 வது வயதில், மாரடைப்பால்
சான் டியாகோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்காவில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இயற்பியலில் சாதனை படைத்த, 2 வது நோபல் பரிசு பெற்ற இவரை, சிறப்பிக்கும் வகையில் கவுரவித்து அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.
ஃபோட்டான்களின் குறுக்குப் பரப்பின் அலகு, ‘ஜி.எம். அலகு’ என்று இவரது பெயரால் குறிப்பிடப்பட்டது.
ஜூன்-28.நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கணித இயற்பியலாளர், அணு மையத்தின் அணுக்கரு ஷெல் மாதிரியை முன்மொழிந்தவர்- மரியா கோப்பெர்ட் மெயர் (Maria Goeppert Mayer) பிறந்த தினம்.
Reviewed by rajkumar sathish
on
20:05
Rating: 5
Reviewed by rajkumar sathish
on
20:05
Rating: 5


No comments: