ஆகஸ்ட்-01. கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் குறித்த ஆராய்ச்சி செய்த, ஆஸ்திரிய-ஜெர்மானிய உயிரிவேதியியல்அறிவியலாளர்- ரிச்சர்ட் குன் (Richard Kuhn) மறைந்த தினம்.
இன்று நினைவு நாள்:- ஆகஸ்ட்-01.
கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் குறித்த ஆராய்ச்சி செய்த,
ஆஸ்திரிய-ஜெர்மானிய உயிரிவேதியியல்அறிவியலாளர்-
ரிச்சர்ட் குன் (Richard Kuhn) மறைந்த தினம்.
பிறப்பு:-
டிசம்பர்-03, 1900 ஆம் ஆண்டு,
வியன்னா, ஆஸ்திரியாவில் பிறந்தார்.
கிராமர் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார். 1918 முதல் வியன்னா
பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார். பின்னர் ரிச்சர்ட் வில்ஸ்டாட்டரின் இணைந்து நொதிகள்துறையில் 1922 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
ஆராய்ச்சிகள்:-
கரோட்டினாய்டுகளின் வேதியியல் தன்மையைப் பற்றிய ஆய்வு தொடர்பாக குன் இரட்டை பிணைப்புகளைக் கொண்ட சேர்மங்களை ஆராய்ந்தார்.
இவற்றில் எட்டு புதிய வகைகளை கண்டுபிடித்தார், எனவே அவற்றின் அடிப்படை அமைப்பை பகுப்பாய்வு செய்ய முடிந்தது. மேலும்
பொருட்களை தனிமையாக்குதல் மற்றும் தூய்மையான உற்பத்தியில் குரோமடோகிராஃபிக் நுட்பங்களின் வளர்ச்சி முக்கியமானது என்றார்.
இவர், வைட்டமின் பி 2 மற்றும் ஆன்டிடெர்மாடிடிஸ் வைட்டமின் பி 6 ஆகியவற்றில் முக்கியமான பணிகளை மேற்கொண்டார்.
விருதுகள்:-
1938ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசுபெற்றார்.
கோதே பரிசு (1942),
வில்ஹெல்ம் எக்ஸ்னர் பதக்கம் (1952).
மறைவு:-
ஆகஸ்ட்-01, 1967 ஆம் ஆண்டு,
ஹைடல்பெர்க், ஜெர்மனியில் மரணமடைந்தார்.
1 comment:
அருமையான தகவல் .பாராட்டுக்கள்