Home
JULY
ஜூலை-09. அமெரிக்க கண்டுபிடிப்பாளர்,தையல் இயந்திரத்தைக் கண்டறிந்தவர்- எலியாசு ஓவே (Elias Howe) பிறந்த தினம்.
ஜூலை-09. அமெரிக்க கண்டுபிடிப்பாளர்,தையல் இயந்திரத்தைக் கண்டறிந்தவர்- எலியாசு ஓவே (Elias Howe) பிறந்த தினம்.
02:07
Read
இன்று பிறந்த நாள்:- ஜூலை-09.
அமெரிக்க கண்டுபிடிப்பாளர்,தையல் இயந்திரத்தைக் கண்டறிந்தவர்- எலியாசு ஓவே
(Elias Howe)
பிறந்த தினம்.
பிறப்பு:-
ஜூலை-09, 1819
ஸ்பென்சர், மாசசூசெட்ஸ்இல் பிறந்தார்.
இவரது , குடும்பத்தின் முன்னோர்கள் வார்விக்சைரிலுள்ள பிரிங்க்லோ விலிருந்து அமெரிக்காவில் 1630 இல் குடியேறினார்கள்.
எலியாசு ஆறு வயதிலிருந்தே தந்தைக்கு உதவியாகப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். பருத்தி ஆலைகளுக்குத் தேவையான துளையிட்ட அட்டைகளைத் தயாரித்து அளிப்பது இவர் மேற்கொண்ட ஒரு பணியாகும். அதே நேரம் அமைதியான குளிர்காலங்களில் பள்ளிக்கும் சென்று கல்வி பயின்று வந்தார்.
11 ஆம் வயதில் இவருடைய ஊருக்கு அருகில் உள்ள வேறொரு பண்ணையில் பணிக்குச் சேர்ந்தார். பதினாறு வயது நிரம்பிய போது உடல் நலம் குன்றியதாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் தன் பண்ணைக்கே திரும்பினார்.
பணிகள்:-
1834 இல் லோவெல் என்ற ஊரில் அமைந்திருந்த நெசவாலை ஒன்றில் எலியாசு பணியில் சேர்ந்தார். நெசவுத்தறி நாடா இயங்கும் முறை, நெய்யப்படும் துணி வகைகள் பற்றிய பல்வேறு செய்திகளை இங்கு சிறந்த முறையில் கற்றுக் கொண்டார். பருத்தி இழையை உருவாக்கும் எந்திரங்களைப் பழுது பார்க்கும் பிரிவில் பணியாற்றியதால் எந்திரங்கள் இயங்கும் முறைகளைத் தெளிவாக அறிந்து கொண்டார்.
1838-இல் போசுடனில் கார்ன்ஹில் எனுமிடத்தில் அரி டேவிசு என்ற தலைமைக் கைவினைஞரின் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
துல்லியமான கருவிகள், தைக்கும் கருவிகளைப் பழுது பார்க்கும் பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார்.
தையல் இயந்திரம்:-
1844 இல் இவருடைய நண்பர் ஜார்ஜ் பிசர் என்ற வணிகர் எலியாசுக்குத் தேவையான உதவிகளை வழங்கினார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், துணி தைக்கும் தொழிலில் புதிய எந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
பாசுடன் இரயில்வே துறையில் எந்திர ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார்.
ஓய்வுக்காலத்தில் துணிதைக்கும் எந்திரம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
1844 அக்டோபரில் ஓர் அடிப்படை தையல் எந்திரத்தை உருவாக்கினார்.
இது மரம் எஃகிரும்பு, கம்பி, அதனுடன் பிணைத்திருக்கும் ஆணிகள் மற்றும் ஊசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது.
ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி அமைக்கப்பட்ட பூட்டுத் தையல் முறை எந்திரமாக இது செயல்பட்டது.
இது உலக எந்திர வரலாற்றில் தையல் முறையில், ஆடை வடிவமைப்பில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
1845 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடர்ந்து இயங்கும் தையல் எந்திரம் ஒன்றை உருவாக்கினார்.
1846இல் இதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது.
சிறப்புகள்:-
1867 இல் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியில் இவருடைய தையல் எந்திரம் தங்கப்பதக்கம் வென்றது.
இவரைப் போற்றும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.
பிரான்சு நாடு அங்கு அழைத்து எலியாசைப் பெருமைப் படுத்தியது.
மறைவு:-
1867 ஆம் ஆண்டு அக்டோபர்-03 இல் தனது 48 வது வயதில் இவர் காலமானார்.
புரூக்ளின். நியூயார்க், கிரீன்வுட் இடுகாட்டில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
1965 ஆம் ஆண்டு தி பீட்டில்சின் வெளியிட்ட "ஹெல்ப் திரைப்படம்" எலியாசின் நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்டது.
ஜூலை-09. அமெரிக்க கண்டுபிடிப்பாளர்,தையல் இயந்திரத்தைக் கண்டறிந்தவர்- எலியாசு ஓவே (Elias Howe) பிறந்த தினம்.
Reviewed by rajkumar sathish
on
02:07
Rating: 5
Reviewed by rajkumar sathish
on
02:07
Rating: 5


No comments: