Breaking

ஜூலை-11. பிரஞ்சு கண் சிகிச்சை நிபுணர், "டையாப்ட்டர்" அலகை கண்டுபிடித்தவர்- பெர்டினாண்ட் மோனயர் (Ferdinand Monoyer) மறைந்த தினம்.



இன்று நினைவு நாள்:- ஜூலை-11.

பிரஞ்சு கண் சிகிச்சை நிபுணர்,  
"டையாப்ட்டர்" அலகை கண்டுபிடித்தவர்-
பெர்டினாண்ட் மோனயர் 
 (Ferdinand Monoyer) மறைந்த தினம்.


பிறப்பு:-

1836 ஆம் ஆண்டு, மே- 9 இல் லியோனில் பிறந்தார்.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் மருத்துவம் பயின்றார்.

பணிகள்:-

கிழக்கு பிரான்சில் உள்ள நான்சி பல்கலைக்கழகத்தில்  சேர்ந்தார்.
மேலும்,  ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களுக்குச் சென்றார், மேலும் அவர் மருத்துவ மாணவர்களுக்கு கற்பித்தார். 

1877 முதல் 1909 வரை லியோனின் பல்கலைக்கழகத்தில் கடைசியாக பதவி வகுத்திருந்தார்.



கண்டுபிடிப்புகள்:-

மோனயர் விளக்கப்படம் எனும் பார்வைத் திறனைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் அட்டவணையையும் கண்டுபிடித்தார்.

டையாப்ட்டர் 
(diopter):-  லென்ஸ்/வளைந்த கண்ணாடி
ஒன்றின் ஒளியின் அளவை அளக்கப் பயன்படும் அலகு ஆகும். இதன் பெறுமானம் குவியத்தூரத்தின் தலைகீழ் அளவு மீட்டரில் அளக்கப்படுவதற்குச் சமமானதாகும். 

டையாப்ட்டரிக்கு என்று ஒரு சுருக்கக் குறியீடு அனைத்துலக முறை அலகுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இல்லை. 
எனவே, இந்த அலகை 1872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். 

பார்வை அளவையியல்:-

பார்வை குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்றவற்றிற்கு கண் மருத்துவரால் எழுதப்படும் மருந்துக்குறிப்பில் டையாப்ட்டர் பயன்படுத்தப்படுகிறது. 

குழிவு வில்லைகள் "எதிர்" பெறுமானத்தை உடையது, கிட்டப் பார்வையைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. 

குவிவு வில்லைகள் "நேர்" பெறுமானத்தை உடையது, தூரப்பார்வையை சரிசெய்யப் பயன்படுகிறது. 

மிதமான மையோபியா (கிட்டப் பார்வை) கண்ணிற்கான வில்லையின் பெறுமானம் -1.00 இலிருந்து -3.00 வரையாகும்.

அதே நேரத்தில் தூரப்பார்வைக்கு +1.00 - +3.00 ஆகும்.

மனிதக் கண்ணின் பார்வை திறன் அதன் கருவிழிப்படலத்தின் ஒளிமுறிவு ஆற்றலிலும், லென்ஸின் ஒளிமுறிவு ஆற்றலிலும்  உள்ளது. 

சாதாரணமாக இருக்கும்போது கண்ணுக்கான பார்வை திறன் 60 டையாப்ட்டர்கள் ஆகும். 

அண்மையிலும் தூரத்திலும் கண் பொருட்களைப் பார்க்கும்போது இவை மாறி அமைக்கப்படும் இது விழியின் ஏற்ப்பு தகவமைப்புத் தன்மை எனப்படும். 

மனித விழியின் பிலியர்த்தசை சுருங்கி விரிவடைதலால் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள லென்ஸ்சும் சுருங்கி விரிகின்றது. 

லென்ஸ் எவ்வளவு குவிகின்றதோ அவ்வளவு அதன் பார்வை திறன் உயர்வடையும். 

மனிதன் வயதாக ஏற்பவமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. 

சிறுவர் பருவத்தில் 15 - 20 டையாப்ட்டர்கள் , 25 வயதளவில் 10 டையாப்ட்டர்கள் , 50 வயதளவில் 
1 டையாப்ட்டர் என இவை மாறுபடுகின்றன.


இறப்பு:-

ஜூலை-11, 1912 இல்  தனது  76வது வயதில்
லியோன், பிரான்சில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.