Breaking

ஜூலை-12.உலக மக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த திரைப்படத்துறை கலை நாயகர்- ஜார்ஜ் ஈஸ்ட்மேன் (George Eastman) பிறந்த தினம்.


இன்று பிறந்த நாள்:- ஜூலை-12.

உலக மக்களை மகிழ்ச்சியில்
திளைக்கச் செய்த திரைப்படத்துறை
கலை நாயகர்- ஜார்ஜ் ஈஸ்ட்மேன்
(George Eastman) பிறந்த தினம்.

#பிறப்பு:-

ஜூலை -12, 1854 ஆம் ஆண்டு,
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் பிறந்தார்.
இவருக்கு 15 வயதான
போது ஒரு காப்பீட்டு நிறுவனத்
தில் அலுவலக உதவியாளராக
பணியாற்றி வந்தார். அதனைத்
தொடர்ந்து வங்கிப் பணியில் 
சேர்ந்தார். 

#கண்டுபிடிப்புகள்:-

தமது, 24-ம் வயதில் படமெடுக்க புகைப்பட கருவி வாங்கினார்.
ஆனால் படமெடுப்பதற்கு
பதிலாக அதிக எடையுள்ள "புகைப்பட கருவிகள்" மற்றும்
அப்போது இருந்த "வெட் பிளேட் எமல்ஷனை" (பிலிம் பிலேட் ஈரப்பதம்) மாற்றுவதற்கான ஆராய்ச்சி செய்தார். பிறகு "ட்ரை பிளேட் எமல்ஷனை" (உலர்ந்த பிளேட்) கண்டுபிடித்தார்.

பிறகு ,1880 இல் வங்கி வேலை ராஜினாமா செய்துவிட்டு "போட்டோ
கிராபிக் கம்பெனி" தொடங்கினார்.

பின் 1885-ல் வில்லியம் ஹால்
வாக்கருடன் இணைந்து "சிறிய
ரோல் காமிரா" கண்டுபிடித்தார். 
பிறகு தனியாக "கோடாக் என்னும் நிறுவனத்தை" உருவாக்கினார்.
பிறகு 1888 முதல் கோடாக் காமிரா விநியோகம் செய்யப்பட்டது.
பிறகு "படசுருள்" உருவாக்கினார்.
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த திரைப்பட காமிராவில் இவருடைய பட சுருள் பயன்படுத்த பட்டது.
இவர் எளிதில் "தீ பிடிக்காத  அசிடேட் பட சுருள்" கண்டுபிடித்தார்.

எடிசன், ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த திரைப்பட காமிராவில் கருப்பு,வெள்ளை படசுருள் பயன்படுத்த பட்டது.
முதலில் பேசாத படம் வந்தது. 
பின்னர் பேசும்படம் வெளி
வந்து மிகுந்த வரவேற்பை
பெற்றது. அதன் பிறகு ஈஸ்ட்மேன் சினிமாவை வண்ணமாக்கினார். 

கோடாக் நிறுவனம் வண்ணப்படச்
சுருளை முதன் முதலாக தயாரித்து
வெற்றி கண்டது. இது உலகெங்கும்
மிகுந்த வரவேற்பை பெற்றது.
ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த வண்ணத்
துக்கு அவரது பெயராலேயே
'ஈஸ்ட்மேன் கலர்' என்ற பெயர்
சூட்டப்பட்டது. அதன் பிறகு
உலகெங்கும் கலர் திரைப்படங்கள்
வெளிவரத் தொடங்கின.

1992-ம் ஆண்டு எண்முறை
(டிஜிட்டல்) தொழில்நுட்பம்
திரைப்படத்தின் "சிலியான்"
 என்னும் ஒரு பைல் பார்மேட்டை கண்டுபிடித்து,  இன்றளவும் திரைப்பட துறையில் பயன்படுத்தப் படுகிறது.

#மறைவு:-

ஈஸ்ட்மேன் கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளாமல் பலவித தொழில்நுட்பங்களை கண்டுபிடித்த இவர், 77-வது வயதில் கடு
மையான முதுகு வலியால் 
1932-ம்
ஆண்டு, மார்ச்-14 அன்று தற்கொலை செய்துக்
கொண்டார். 

அவரது அறையில்
அவர் கடைசியாக எழுதிய கடிதம்
கண்டெடுக்கப்பட்டது. அதில்,'எனது நண்பர்களுக்கு...
என்னுடைய வேலை முடிந்துவிட்
டது. நான் ஏன் காத்து இருக்க
வேண்டும்' என்று எழுதி கையெ
ழுத்துப் போட்டு இருந்தார்.

No comments:

Powered by Blogger.