Home
JULY
ஜூலை-12. கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்த செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் உருவாக்கியவர்- உமர் தம்பி (Umar Thampi) மறைந்த தினம்.
ஜூலை-12. கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்த செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் உருவாக்கியவர்- உமர் தம்பி (Umar Thampi) மறைந்த தினம்.
02:22
Read
இன்று நினைவு நாள்:- ஜூலை-12.
கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்த செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் உருவாக்கியவர்-
உமர் தம்பி (Umar Thampi) மறைந்த தினம்.
பிறப்பு:-
தமிழ்நாட்டில் அதிராம்பட்டினம் ஊரில் ஜூன்- 15, 1953 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆரம்ப கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி அதிராம்பட்டிணத்தில் பயின்று முடித்தார்.
Bsc-விலங்கியல் பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்.பிறகு இலத்திரனியலில் டிப்ளோமா படிப்பினையும் முடித்தார்.
இளம் வயது கண்டுபிடிப்புகள்:-
1983 ஆம் ஆண்டு உள்ளூரில் வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார்.
மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார்.
அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.
பணிகள்:-
இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள Al Futtaim Group of Companies ல் இலத்திரனியல் உபகரணங்களுக்கான National Panasonic பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
துபாயில் பணிபுரிந்த காலங்களில் ஓய்வு நேரத்தில்
கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார்.
துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினி நுட்பவல்லுனரானார்.
Network Administrator, SAP Implementation Team Head, Kiosk Programmer எனக் கணினித் துறையில் திறம்பட பணியாற்றினார்.
ஆய்வுகள்:-
2001 இல், செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென் பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்து வந்துள்ளார்கள்.
தமிழ் கணினிக்கு செய்த பங்களிப்புகள்
தேனீ இயங்கு எழுத்துரு மைக்ரோசொஃப்ட் நிறுவனத்
தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களால்
அமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது.
தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக பல்வேறு இணைய முகவரிகளில் பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார்.
இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் இணைய அகராதி:-
தமிழ் இணைய அகராதி கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும் talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்து உருவாக்கினார்கள்.
மறைவு:-
கணினி தமிழில் முன்னோடியான இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜூலை-12, 2006 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
ஜூலை-12. கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்த செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் உருவாக்கியவர்- உமர் தம்பி (Umar Thampi) மறைந்த தினம்.
Reviewed by rajkumar sathish
on
02:22
Rating: 5
Reviewed by rajkumar sathish
on
02:22
Rating: 5


No comments: