Breaking

ஜூலை-31. கணிதவியலாளர், புள்ளியியலாளர், பல்துறை அறிஞர்- தாமோதர் தர்மானந்தா கோசாம்பி (Damodar Dharmananda Kosambi) பிறந்த தினம்.



இன்று பிறந்த நாள்:- ஜூலை-31.

கணிதவியலாளர், புள்ளியியலாளர், பல்துறை அறிஞர்- 
தாமோதர் தர்மானந்தா கோசாம்பி (Damodar Dharmananda Kosambi) பிறந்த தினம்.

பிறப்பு:-

ஜூலை-31, 1907 இல் கோவா, இந்தியாவில் பிறந்தார்.
குடும்பத்துடன் மசாசுசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜ்
குடிபெயர்ந்து, 
மசாசுசெட்ஸின் கிராமர் பள்ளியில் பயின்றார்.
 1920ல் கேம்பிரிட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். 

கேம்பிரிட்ஜில் தேர்ச்சி பெற்று 1924ல் ஹார்வார்ட் பல்க்லையில் சேர்ந்தார். 
அவரது தந்தை இந்திய சுதந்திரப்போரில் பங்கேர்க்க விரும்பி, இந்தியா வந்தமையால் கோசாம்பியும் படிப்பை விட்டுவிட்டு குஜராத்துக்கு வந்து சேந்தார்.

1926ல் கோசாம்பி மீண்டும் அமெரிக்கா திரும்பி ஹார்வார்ட் பல்கலையில் சேர்ந்தார்.

பணிகள்:-

 ஜார்ஜ் டேவிட் பிர்க்காஃப் அவர்களின் கீழே கணிதவியலில் ஆய்வுசெய்ய ஆரம்பித்தார். 

1929ல் ஹார்வார்டில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்று இந்தியா திரும்பினார்.

இந்தியாவில்  பனாரஸ் இந்து பல்கலையில் கணிதமும் ஜெர்மன் மொழியும் கற்பிக்கும் ஆசிரியராக ஆனார்.
கணித ஆய்வுகளையும் செய்துவந்தார். அவரது முதல் ஆய்வேடு 
Precessions of an Elliptic Orbit 1930ல் வெளிவந்தது.

ஆராய்ச்சிகள்:-

அலிகார் முஸ்லீம் பல்கலைக்குக் கணிதப்பேராசிரியராக  பணியாட்ரினார்.
அபோது, 
கணிதம் [Differential Geometry ]
மற்றும் பொறியியலில் [Path Spaces] என  எட்டு ஆய்வேடுகளைத் தயாரித்தார்.

1933ல் கோசாம்பி பூனாவில் உள்ள ஃபெர்கூசன் கல்லூரியில் டெக்கான் கல்வி கழகத்தில் கணிதவியலாசிரியராகச் சேர்ந்தார். 
அங்கே பணியாற்றும் போது, 1944 ல் வரைபடங்களை ஆராய்ந்து புகழ்பெற்ற ஆய்வேடு ['The Estimation of Map Distance from Recombination Values’] ஒன்றை வெளியிட்டார். 
இது "கோசாம்பியின் வரைபட
செயல்பாட்டுக் கொள்கை" எனப்படுகிறது. 

அதேபோல புள்ளியியலிலும் முக்கியமான சில முன்னோடி முயற்சிகளைச் செய்தார். Proper orthogonal decomposition- (POD) என அழைக்கப்படும் அந்த ஆய்வு இன்றும் புகழ்பெற்றுள்ளது.
 
1945ல் ஹோமி பாபா கோசாம்பியை டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிச்சர்ச் (TIFR) அமைப்பில் கணிதத்தில் ஆய்வு செய்தார். அப்போது  கணிப்பொறியியலை ஆய்வு
செய்வதற்காக 1948 முதல் இரு வருடங்கள் கோசாம்பி யுனெஸ்கோ உதவியுடன் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் சென்றார். அப்போது சிக்காகோ பல்கலையில் கணிதப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 

நூல்கள்:-

1956ல் ‘இந்திய வரலாற்றாய்வுக்கு ஒரு முன்னுரை [Introduction to the Study of Indian History] என்ற நூலை வெளியிட்டார்.

’பண்டைய இந்தியாவின் பண்பாடும் நாகரீகமும்’ என்ற நூல் 1965
ல் வெளிவந்தது.

இறப்பு:-

அணு ஆற்றலுக்கு மாற்றாக மாற்று எரிபொருட்களை உருவாக்க
வேண்டுமென கருத்து கொண்ட இவர், ஜூன்- 29, 1966 ல் தனது 58 வது வயதில் புனே, மஹாராஷ்டிரா, இந்தியாவில் காலமானார். 

 மரணத்துக்கு பின் அவருக்கு இந்திய பல்கலைமானியக்குழுவின் உயரிய விருதான "ஹரி ஓன் ஆஷ்ரம் விருது" அளிக்கப்பட்டது

No comments:

Powered by Blogger.