Breaking

ஸ்டெம் ஸெல்கள் (குருத்தணுக்கள்) பற்றி அறிந்து கொள்வோமா

ஸ்டெம் ஸெல்கள் (குருத்தணுக்கள்) என்றால் என்ன?

மனித உடலில் தினசரி ஆரோக்யத்திற்கு தேவையான நூற்றுக்கணக்கான வகை உயிரணுக்கள் உள்ளன. இந்த உயிரணுக்களின்  பொறுப்பு நம் உடலை செயல்பட வைப்பதாகும் – இதயத்தை துடிக்க வைப்பது, மூளையை சிந்திக்க வைப்பது, சிறுநீரகத்தை இரத்தம் சுத்திகரிக்க வைப்பது, பழைய தோல் உதிரும் பொழுது புதிய தோல் உண்டாக்குவது போன்ற பல செயல்கள். குருத்தணுக்களின் தனி பொறுப்பு என்னவென்றால் பிற அனைத்து உயிரணுக்களையும் உருவாக்குவது. குருத்தணுக்கள் பிற உயிரணுக்களின் சுரபியாகும். குருத்தணுக்கள் பெருகும் பொழுது அவை மேலும் பல குருத்தணுக்களையோ அல்லது வேறு வகை உயிரணுக்கள் பலவற்றையோ உருவாக்க கூடியவை. உதாரணமாக, தோலில் இருக்கும் குருத்தணுக்கள் மேலும் பல தோல் குருத்தணுக்களையோ அல்லது பிற விசேஷ கடமை கொண்ட தோல் உயிரணுக்களையோ உருவாக்க கூடியவை. விசேஷ கடமைக்கு ஓர் உதாரணம் தோலுக்கு கருமை தரும் மெலனின் எனப்படும் சாயம் செய்வது.

No comments:

Powered by Blogger.