ஆகஸ்ட்- 26 அறிவியல் அறிஞர், ‘தற்கால வேதியியலின் தந்தை’ -ஆன்டோனி லாவியோசியர் (Antoine Lavoisier) பிறந்த தினம்.
இன்று பிறந்த நாள்:- ஆகஸ்ட்- 26
அறிவியல் அறிஞர், ‘தற்கால வேதியியலின் தந்தை’ -ஆன்டோனி லாவியோசியர் (Antoine Lavoisier) பிறந்த தினம்.
பிறப்பு:-
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார் ஆகஸ்ட்-26, 1743 இல் பிறந்தார்.
பள்ளியில் படிக்கும்போதே உயிரியியல், வேதியியல், கணிதம் மற்றும் வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.
பிறகு, 1764-ல் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
பிறகு இவரது ஆர்வம் அறிவியல் பக்கம் திரும்பியது.
25 வயதில் பிரான்ஸ் நாட்டு அறிவியல் கழகத் தின் உறுப்பினரானார்.
தவறான பல கொள்கைகள் காரணமாக பின்தங்கியிருந்த வேதியியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் இவர் முக்கியமானவர்.
ஆராய்ச்சிகள்:-
1769-ல் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
நெருப்பு எரிவதற்குக் காற்றில் உள்ள பிராணவாயுதான் காரணம் என்பதையும் கண்டறிந்தார்.
ஓர் உலோகத்தை எரிக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைவிட அதிகமாக இருக்கும் என்பதை சோதனைகள் மூலம் மெய்ப்பித்தார்.
வேதியியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கினார்.
பிரான்ஸ் முழுவதும் எடை மற்றும் அளவுகளைக் கணக்கிடும் முறையை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.
கந்தகம் உள்ளிட்ட சில பொருட்கள் கூட்டுப் பொருட்கள் அல்ல, அவை தனிமமே என நிரூபித்தார்.
ஆக்சிஜன், நைட்ரஜன் இரண்டும் கலந்ததுதான் காற்று என்பதையும் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்ததுதான் நீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவினார்.
பொருட்களின் நிறை குறையாப் பண்பினை (Conservation of Matter) கண்டறிந்தவரும் இவரே. ப்ளோசிட்ரான் குறித்த ஆய்வுதான் இவரது ஆய்வுகளிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
உயிரினங்கள், சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரித்து, சக்தி பெறுகின்றன என்பதைக் கண்டறிந்து கூறினார். ‘எலிமன்டரி சப்ஸ்டன்சஸ்’ என்ற தனிமங்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
நூல்கள்:-
1789-ல் ‘எலிமண்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி’ என்ற பாடநூலை எழுதி வெளியிட்டார்.
விருதுகள்:-
பிரெஞ்சு அறிவியல் அகாடமி -1768.
சிறப்புகள்:-
இரசாயன திருப்புமுனை விருது வரலாறு வேதியியல் அமெரிக்க இரசாயன சமூகம், போன்றவைக்கு வழங்கப்படுகிறது.
பதவிகள்:-
அரசு விஞ்ஞானியாக 20 ஆண்டு காலம் பணியாற்றினார்.
பிரெஞ்ச் ராயல் அறிவியல் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் செயல்பட்டார்.
இறப்பு:-
வேதியியல் தொடர்பாக எழுதிய குறிப்புகள் இன்றும் பல அறிவியல் ஆய்வுகளுக்கு, முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய இவர், மே-8, 1794-ம் ஆண்டு, தனது 51 வது வயதில்
மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 51.


No comments: