Breaking

அறிவியல் அறிஞர்-ஜேம்ஸ் பிராங்க்(James Franck) அவர்களைப் பற்றி.. சில வரிகள் அறிவோம்..


ஜேம்ஸ் பிராங்க்(James Franck) அவர்களைப் பற்றி.. சில வரிகள் அறிவோம்..


பிறப்பு:-

ஆகஸ்ட் 26, 1882,

மறைவு:-

 மே-21,1964) 

🧫செருமானிய இயற்பியலாளர்,பல்வேறு வளிமங்களில் இலத்திரன்களின் பண்புகள் குறிப்பாக "போர் எடுகோள்களின் அடிப்படைக் கூறுகளை ஆய்வு செய்து அக்கொள்கையை மெய்ப்பித்தமைக்காக 'குஸ்டாவ் லுட்விக் ஹெர்ட்ஸ் என்பவருடன் சேர்ந்து 1925 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டவர்.

🧫ஒரு பொருளிலுள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது மூலக்கூறுகள் உருவாவதும், சிதைவதும் நிகழ்கின்றன. அப்போது அவை அதிர்வுறுகின்றன; சுழல்கின்றன. அதனால் ஏற்படும் மாற்றத்திற்கான வரைபட வளைவுகளை இரு அணுத் தொகுதிகளுக்கு உருவாக்கிய உடனே, ஈரணு மூலக்கூறுகள் அவற்றின் கற்றை நிறமாலைத் தொகுதி அமைப்பிலிருந்து மாறுபடுகின்றன. இவ்வாறு மாறுபடுவதைத் தீர்மானிக்கத் தேவையான முறைகளை வகுத்தவர் 'ஜேம்ஸ் பிராங்க்' ஆவார்.

No comments:

Powered by Blogger.