Breaking

அக்டோபர்-01. ஜேனசு நிலாவை கண்டுபிடித்த பிரெஞ்சு வானியலாளரும்- ஆதவின் சார்லசு தோல்பசு (Audouin Charles Dollfus) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- அக்டோபர்-01.


ஜேனசு நிலாவை கண்டுபிடித்த பிரெஞ்சு வானியலாளரும்-
ஆதவின் சார்லசு தோல்பசு (Audouin Charles Dollfus) மறைந்த தினம்.

பிறப்பு:-

நவம்பர்-12, 1924 ஆம் ஆண்டு பிரான்ஸில் பிறந்தார்.
இவர் பாரிஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று 1955 இல் இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

1946 இல் இருந்து தனது ஆசிரியரான பெர்னார்டு இலியோத் அவர்களைப் பின்பற்ரி மியூடன் வான்காணகத்தில் வானியலாலராகப் பணிபுரிந்தார். குறிப்பாக இங்கு சூரியக் குடும்ப இயற்பியல் ஆய்வுக்கு வழிகாட்டினார். 

ஆராய்ச்சிகள்:-

வைகிங் விண்கலம் செவ்வாயில் இறங்கும் முன்பு, செவ்வாய் மேற்பரப்பின் இயைபுகள் பற்றி பல விவாதங்கள் நிலவின. இவர் பல ஆயிரம் புவித்தரை ஒளியியல் தோற்றங்களோடு ஒப்பிட்டு செவ்வாயின் பாலைநிலத்து மேற்பரப்பின் வேதி உள்ளடக்கக் கூறுகளை தீர்மானிக்க முயன்றார். இவர் செவ்வாயின் தோற்ரத்துக்கு தூள்நிலை இலிமோனைட் ஒத்துபோவதைக் கண்டார். எனவே, செவ்வாயின் தரை இரும்பு ஆக்சைடால் ஆனது என்ற முடிவுக்கு வந்தார்.
முனைவாக்க ஒளியால் கோள்சூழ்ந்த அல்லது இயற்கைத் துணைக்கோளின் வளிமண்டலத்தையும் கண்டறிய முடியும் என்றார்.
பெரும்பான்மையான அறிவியலார் 1950 களில் அறிவன்(புதன்) கோள் மிகச் சிறிய கோளாகையால், புறவெளிக்கு மூலக்கூறு தப்பித்தல் அல்லது வெளியேற்றத்தால் தன் வளிமண்டலத்தை இழந்திருக்கும் என்றே கருதிவந்தனர். ஆனால் தோல்பசு பிரெஞ்சு பைரெனீசில் உள்ள பிக் து மிதி வானகாணகத்தில் மேற்கொண்ட முனைவாக்க ஓளி அளவீடுகளால் அறிவனில் சிறுவளிமண்டலம் இருப்பதை உறுதிபடுத்திக் கூறினார். 
அறிவனில் பொலிவு மிக்க அடிப்பகுதி மட்டுமன்றி, இருண்ட வட்டாரங்களும் உள்ளன; இது முதலில் 1889 இல் ஜியோவன்னி சுசியாபரெல்லியால் நோக்கப்பட்டது. பிக் து மிதி வான்காணகத்தில் உள்ல ஒளிவிலக்கத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இவர் 1959 இல் 300கிமீ அளவினும் சிறிய பரப்பை பிரித்து ஆய்வு செய்தார்.
இவர் நிலா வளிமண்டல ஆய்வையும் மேற்கொண்டார். நிலாவில் இருந்து விண்வெளிக்கு வெளியேறும் வளிம வீதம் மிக உயரளவில் அமைந்துள்ளதால், நிலாவில் வளிமண்டலம் ஏதும் இல்லை எனும் முடிவை எட்டினார். வளிமண்டலம் இருந்தால் அதை முனைவாக்க ஒளி ஆய்வு எளிதில் கண்டுபிடித்துவிடும்; பெர்னார்டு இலியோத்தும் பின்னர் தோல்பசுவும் நிலாவில் கண்டுபிடிக்க முடிந்த முனைவாக்க ஒளி இல்லாமையால், கோட்பாட்டியலாக நிலாவில் வளிமண்டலம் இல்லை என உறுதிபடுத்தினர். இவர் 1966 இல் காரிக்கோளின் உள்புற நிலாவாகிய ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பின் போது ஜேனசுவுக்கு அருகில் உள்ள இரு வலயங்களும் புவிக்கு விளிம்பாக அமைந்திருந்தன. எனவே அவை கண்ணுக்குப் புலப்படவில்லை. இதே நேரத்தில் ஜேனசின் வட்டணையைப் பகிரும் எபிமிதியசு நிலாவும் நோக்கப்பட்டது. வளிமண்டல வெங்காற்று வளிமக்கலன் பறப்பில், அடுக்குக் கோளத்தில் பறத்தல் உட்பட, பல உலகச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். இவர்தான் முதன்முதலில், நம் வளிமண்டலத்தின் அடுக்குக்கோளத்தில் வானியல் நோக்கீடுகள் செய்து செவ்வாயை விரிவாக ஆய்வு செய்தார்.

விருதுகள்:-

1993 இல் பிரெஞ்சு வானியல் கழகத்தின் பிரிக்ஸ் ஜூல்ஸ் ஜான்சென் விருது பெற்றார்.

மறைவு:-

அக்டோபர்-01, 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

குறுங்கோள் 2451 தோல்பசு இவர் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.