Home
SEPTEMBER
செப்டம்பர்-21. தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்து அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழிவகுத்த நெதர்லாந்து இயற்பியலறிஞர்- ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) பிறந்த தினம்.
செப்டம்பர்-21. தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்து அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழிவகுத்த நெதர்லாந்து இயற்பியலறிஞர்- ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) பிறந்த தினம்.
06:56
Read
தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்து அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழிவகுத்த நெதர்லாந்து இயற்பியலறிஞர்-
ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) பிறந்த தினம்.
பிறப்பு:-
நெதர்லாந்தில் உள்ள குரோனின்ஜென் என்ற ஊரில் 1853, செப்டம்பர்-21 ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை ஹார்ம் காமர்லிங்க் ஆன்ஸ், தாயார் அன்னா ஜெர்டினா கொயர்ஸ் ஆவார்கள். இவர் பிறந்த ஊரிலேயே ஹூஜெர்பர்ஜர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பிறகு
ஜே. எம். லெய்டன்வான் பெம்மலென் என்பவரிடம், கிரேக்கம்,லத்தீன் மொழிப்பாடங்களைத் தனியே பயின்றார்.
1870 -ல் குரோனின்ஜென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு பயின்றபோது உட்க்ரெட் பல்கலைக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ஆவி அடர்த்தி என்பது பற்றி எழுதி முதல் பரிசைப் பெற்றார். அங்கு பட்டம் பெற்ற பின் 1871 -ல் ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருடைய ஆசிரியர்களாக விளங்கியவர்கள் புன்சன் மற்றும் கிர்க்கார்ப் என்ற அறிவியலறிஞர்கள் ஆவார்கள். ராபர்ட் கிர்க்கார்ப் என்ற ஜெர்மனிய இயற்பியலறிஞரின் தனிப்பட்ட ஆய்வுச் சாலையில் அவருடைய உதவியாளராகவும் காமர்லிங்க் பணி புரிந்தார்.
தன் சொந்த ஊருக்கு மீண்டும் திரும்பிய பின் அங்குள்ள பல்கலைக் கழகத்தில் 1878 -ல் முதுகலைப் பட்டமும், பின்னர் 1879 -ல் முனைவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வுக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ' புவியியல் சுழற்சிக்கான புதிய நிரூபணங்கள் '(New proofs for the rotation of the earth) என்பதாகும்.
பணிகள்:-
1878 இல் லெப்ட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் பாஸ்சாஎன்ற அறிவியல் அறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். இயக்கவியல் கொள்கையின் அடிப்படையில் பாய்பொருள்களின் பொதுக் கோட்பாடு ( General Theory of the nature of fluids from the perspective of Kinetic theory) என்ற ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார்.
பிறகு 1882 ஆம் ஆண்டு, லெய்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் இயற்பியல்(experimental physics) துறையில் பேராசிரியராகவும், அங்குள்ள ஆய்வுச்சாலையின் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
ஆராய்ச்சிகள்:-
ஆக்சிஜன், ஹைட்ரஜன்,
ஹீலியம் முதலிய வாயுக்களை மிக அதிக அளவு தாழ்ந்த வெப்ப நிலைக்கு உட்படுத்தும் ஆய்வை மேற்கொண்டார்.
பிக்டெட், லிண்டே
ஆகியோரின் முறைகளை ஒருங்கிணைத்து
காமர்லிங்க் ஒரு புதிய முறையைக் கண்டறிந்தார்.
இதன் படி மற்ற வாயுக்களைத் திரவமாக்க்கும்
ஆக்சிஜனை, திரவமாக்கும் முறையில் வெற்றிகண்டார்.
ஒரு மணி நேரத்தில் 14 லிட்டர் அளவு ஆக்சிஜனைத் திரவமாக்கினார்.
1904 இல் மிகப்பெரிய தாழ்ந்த வெப்பநிலை உருவாக்கத்திற்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார்.
1908 இல் ஹாம்ப்சன்-லிண்டே சுழற்சி முறைப்படி ஜூல்- தாம்சன் விளைவைப் பயன்படுத்தி வெப்பநிலையை 1 டிகிரிக்கும் குறைவாக்கும் (-273°) கருவியை வடிவைமைத்தார். இது லெய்டனில் உள்ள பொயர்ஹால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
1911 -ல் பாதரசம் ,
வெள்ளீயம், காரீயம்போன்ற தூய்மையான
உலோகங்களின்
மீள்தன்மை பற்றி ஆராய்ந்தார். 4.2 கெல்வின் அளவு வெப்ப நிலையில் மின்தடை சுழியாகும் என்பதை காமர்லிங்க்கும் அவரது உதவியாளர்களும் கண்டறிந்தனர். பாதரசம் இந்தப் புதிய நிலையை அடைந்து அதனுடைய மின் கடத்தும் தன்மை மிகச் சிறப்பாக அமைகிறது. இது
மீ கடத்து நிலை (super conductivity) எனக் குறிப்பிடப்பட்டது.
விருதுகள்:-
1910 -ல் மத்யூக்கி பதக்கம்,
1912 -ல் ரம்போர்டு பதக்கம்,
1913-இயற்பியல் நோபல் பரிசு
1915-ஃபிராங்க்லின் பதக்கம் போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
நோபல் பரிசு பெற்ற இவர்,
1926 ஆம் ஆண்டில் பிப்ரவரி-21 ஆம் நாள் லெய்டனில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
லெய்டன் பல்கலைக் கழகத்தின் தாழ்ந்த வெப்பநிலை ஆய்வுக்கூடத்திற்கு காமர்லிங்க் ஆன்சின் பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்-21. தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்து அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழிவகுத்த நெதர்லாந்து இயற்பியலறிஞர்- ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
06:56
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
06:56
Rating: 5
Tags :
SEPTEMBER


No comments: