செப்டம்பர்-21 உலக அமைதி நாள் (International Day of Peace)
இன்று சிறப்பு நாள்:- செப்டம்பர்-21
உலக அமைதி நாள்
(International Day of Peace)
==========================
ஐக்கிய நாடுகளின்பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்-21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாள் முன்னர் 1981 இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயேகொண்டாடப்பட்டு வந்தது,ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர்-21இல் கொண்டாடப்படுகிறது.
அமைதி என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது.
சர்வதேச அளவில் பேர் இல்லாத நிலையையும் குறிக்கிறது.
மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும்.
இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் கல்வி, விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் போட்டி போடுகின்றன. இந்த போட்டி, ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. மாறாக சில நாடுகள், மற்ற நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகின்றன.
பயங்கரவாதம் ஒழிய:
உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது அந்த நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளின் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.
அனைத்து நாடுகளும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்துகிறது. மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, பொருளாதாரமும் வீழ்ச்சியடையும்.
உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டவர்களை பாராட்டும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் ஐ.நா. வின் அமைதி பரிசு ஆகிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டும் வருகிறது.


No comments: