செப்டம்பர்-23, 1846 ஆம் ஆண்டில் நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.
09:09
Read
இன்று:- செப்டம்பர்-23, 1846.
நெப்டியூன்
கண்டுபிடிக்கப் பட்ட நாள்.
பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்.நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது.
ஜெர்மனியைச் சேர்ந்த வானியலாளர் ஜோஹன் காட்ஃப்ரைடு கால், பெர்லினில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்திலிருந்து நெப்டியூன் கிரகத்தைக் கண்டுபிடித்தார்.
சூரியக் குடும்பத்தின் 8 வது கிரகமான நெப்டியூனின் இருப்பை, பிரான்ஸைச் சேர்ந்த வானியலாளர் ஜான் ஜோசப்
லெ வெரியர்தான் முதலில் ஊகித்தார்.
யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப்பாதையில் காணப்பட்ட மாறுபாட்டை வைத்து, யுரேனஸுக்கு அடுத்து ஏதோ ஒரு கிரகம் இருக்கக்கூடும் என்று கருதப் பட்டது. இதுகுறித்து, ஜோஹன் காட்ஃப்ரைடு காலுக்கு, லெ வெரியர் தெரிவித்தார்.
1846 ஆம் ஆண்டு இதே நாளில், ஜோஹன் காட்ஃப்ரைடு காலும் அவரது உதவியாளர் ஹென்ரிச் லூயியும் இணைந்து நெப்டியூனைத் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தனர்.
ஆய்வுகளுக்குப் பிறகு, அது ஒரு கிரகம்தான் என்பது உறுதிசெய்யப்பட்டது.
தொலை நோக்கியில் பார்ப்பதற்கு முன்பே கணக்கீட்டின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் இதுதான்.
பூமியைப் போல், 4 மடங்கு விட்டம் கொண்டது. இந்தக் கிரகத்துக்கு ரோமானியக் கடல் தெய்வமான நெப்டியூனின் பெயர் வைக்கப்பட்டது.
நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்ப தாகக் கருதப்படுகிறது. இவற்றுள் ட்ரைட்டன் நிலவு மிகப் பெரியது.
165 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை வலம்வருகிறது நெப்டியூன்.
நாசா அனுப்பிய வாயேஜர்-2 என்ற விண்கலம், 1989 ஆம் ஆண்டு நெப்டியூனைக் கடந்தபோது நெப்டியூனையும் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.
நெப்டியூன் சிறப்புகள்:-
சூரியனில் இருந்து 4.5 பில்லியன் கிலோமீட்டர்கள் (30 AU) தொலைவில் சூரியனைச் சுற்றுகிறது.
நெப்டியூன் தன்னைத்தானே சுற்ற 16 மணிநேரங்கள் எடுத்துக்கொள்கிறது. அதேபோல சூரியனை ஒருமுறை சுற்றிவர 165 பூமி வருடங்கள் எடுத்துக்கொள்கிறது.
யுரேனசைப் போல நெப்டியுனும் ஒரு ‘பனி’ அரக்கனாகும். இது பெரும்பாலும் நீர், அமோனியா மற்றும் மீத்தேன் ஆகிய மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
நெப்டியுனின் மையப்பகுதியில் பூமியளவுள்ள பாறைக்கோளம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நெப்டியுனின் வளிமண்டலம், ஐதரசன், ஹீலியம் மற்றும் மெதேன் ஆகிய வாயுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
நேப்டியுனுக்கும் சனியைப் போலவே அதனைச் சுற்றி ஆறு வளையங்கள் உண்டு.
புளுட்டோ, சூரியனில் இருந்து நெப்டியுனைவிட மிகத் தொலைவில் சுற்றினாலும், சில வேலைகளில், அது நேப்டியுனை விட சூரியனுக்கு அருகில் செல்கிறது, இதற்கு காரணம், புளுட்டோவின் நீள்வட்டப் பாதையே ஆகும்.
நெப்டியுனில் நாமறிந்த உயிர் வாழத் தேவையான காரணிகள் இல்லை.
செப்டம்பர்-23, 1846 ஆம் ஆண்டில் நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்.
Reviewed by JAYASEELAN.K
on
09:09
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
09:09
Rating: 5
Tags :
Special Day


No comments: