Breaking

செப்டம்பர்-23. மருத்துவ வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய இந்திய பெண் வேதியியலாளர்- அசீமா சாட்டர்ஜி (Asima Chatterjee) பிறந்த தினம்.




இன்று பிறந்த நாள்:- செப்டம்பர்-23.


மருத்துவ வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய இந்திய பெண் வேதியியலாளர்- அசீமா சாட்டர்ஜி (Asima Chatterjee) பிறந்த தினம்.

பிறப்பு:- 

செப்டம்பர் -23, 1917 ஆம் ஆண்டு  கொல்கத்தாவில் பிறந்தார்.
அங்கே தனது பள்ளிக்கல்வியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்து பயின்றார். பின்னார் கொல்கத்தா பல்கலைக்கழக இசுகாட்டிழ்சு கல்லூரியில் சேர்ந்து வேதியியல் பாடம் பயின்று 1936 இல் இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் 1938 இல் வேதியியல் முதுநிலை பட்டம் பெற்றார்.

1944 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்  தாவரப் பொருள்களிலும் செயற்கைக் கரிம வேதியியலிலும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். மேலும் இந்திய பல்கலைக்கழகத்தில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றார்.

மேலும் கூடுதலாக இவர் மடிசனில் உள்ள வில்கான்சின் பல்கலைக்கழகத்திலும் கால்டெக்கிலும் ஆய்வுப் பட்டறிவும் பெற்றார்.

பணிகள்:-

கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சீமாட்டி பிரபவுர்ன் கல்லூரியில் 1940 இல் வேதியியல் துறையின் நிறுவனத் தலைவராகச் பணிபுரிந்தார்.

1940 இல் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றால் முதன்முதலாக அறிவியலில் முதுமுனைவர் பட்டம் பெற்ற பெண்மணியானார். 

1954 இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக தூய வேதியியல் துறையில் பணியாற்றினார்.

1962 இல் அப்பல்கலைக்கழகத்தின் தகைமைசான்ற கைரா வேதியியல் பேராசிரியர் பதவி வகித்தார். இப்பதவியில் இவர் 1982 வரைதொடர்ந்து இருந்தார். 



ஆய்வுகள்:-

இவர் கரிம வேதியியலிலும், நிலைத்திணைசார் தாவர மருந்தியலிலும் முக்கிய பங்களிப்பு ஆற்றினார். இவரின் குறிப்பிட்த்தகு பணி வின்சா ஆல்கலாயிடுகளிலும் கைகால் வலிப்புத் தடுப்பு, மலேரியக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஆகும். 

மேலும்  கால்-கை வலிப்பு மருந்து என்ற ஆயுஷ்-56(ayush-56) மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பு செய்தார்.

இவர் இந்தியத் துணைக்கண்ட மூலிகைகள் ஆய்வில் பெரும்பணி ஆற்றியுள்ளார்.



தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் மூலம் 400 க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதி வெளியிட்டு உள்ளார். 

விருதுகள்:-

1961 இல் வேதியியலுக்கான சாந்தி சுவரூப் பட்நாகர் விருதைப் பெற்றார். இவரே இப்பரிசைப் பெறும் முதல் பெண்மணியாவார்.

1975 இல்  பத்மப் பூசன் விருதைப் பெற்றார். 

பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு அறிவியலில் தகவுறு முதுமுனைவர் பட்டத்தை வழங்கின.

1982 பிப்ரவரி முதல் 1990 மே வரை இந்தியக் குடியரசுத் தலைவரால் இராச்சியச் சபையின் உறுப்பினராக அமரத்தப்பட்டார்.

மறைவு:-

நவம்பர்-22, 2006 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.