Home
ACTIVITIES
SEPTEMBER
செப்டம்பர்-24. இயற்கணிதத்தைச்சார்ந்த முப்படியச் சமன்பாட்டிற்கு, இயற்கணிதத் தீர்வு வழங்கியவர்- ஜெரோலாமோ கார்டானோ (Gerolamo Cardano) பிறந்த தினம்.
செப்டம்பர்-24. இயற்கணிதத்தைச்சார்ந்த முப்படியச் சமன்பாட்டிற்கு, இயற்கணிதத் தீர்வு வழங்கியவர்- ஜெரோலாமோ கார்டானோ (Gerolamo Cardano) பிறந்த தினம்.
21:57
Read
இன்று பிறந்த நாள்:- செப்டம்பர்-24.
இயற்கணிதத்தைச்சார்ந்த முப்படியச் சமன்பாட்டிற்கு, இயற்கணிதத் தீர்வு வழங்கியவர்- ஜெரோலாமோ கார்டானோ
(Gerolamo Cardano) பிறந்த தினம்.
பிறப்பு:-
இத்தாலி நாட்டின் வட பகுதியில் உள்ள பாவியா என்ற நகரில் பிறந்தார் செப்டம்பர்-24, 1501ஆம் ஆண்டில் பிறந்தார். இளம் வயதிலேயே
அறிவியலிலும் தத்துவத்திலும் ஆர்வத்துடன் காணப்பட்டார்.
படுவா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவத்தில் 1526 இல் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
இவர் மருத்துவராகப் பணியாற்றினார்.
சிறிய கல்வி நிலையங்களில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார்.
சூதாட்டம், சதுரங்கம் ஆட்டங்களில், கணித அறிவால் சாதுர்யமாக ஆடி வெற்றிபெற்று பணம் ஈட்டியுள்ளார்.
அசாதாரண அறிவுக்கூர்மை கொண்ட இவர், அற்புதமான மருத்துவ சிகிச்சை அளித்து புகழ் பெற்றார்.
இவரது அறிவுத் திறனால் ‘காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ்’ கல்லூரியில் பணியாற்றத் தொடங்கினார்.
கண்டுபிடிப்புகள்:-
கார்டியன் கிரில்லே என்ற கிறிப்டோகிராஃபிக் சாதனம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்தும் மேம்படுத்தியும் உள்ளார்.
இயற்கணிதம், கன அளவு மற்றும் நான்கு எண் சமன்பாடுகள் (quadratic equations) உள்ளிட்ட பல்வேறு கணிதத் தீர்வுகளுக்கு இவர் அடித்தளம் இட்டிருந்தது, இவர் மரணமடைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியவந்தது. முதன்முதலாகப் பூஜ்யத்துக் கும் குறைவான எதிர்மறை எண்களை முறையாகப்பயன்படுத்தியவர்.
ஐரோப்பிய நாடுகளில் ஈருறுப்பு கெழு (binomial coefficients), ஈருறுப்புத் தேற்றம்
(binomial theorem) மற்றும் நிகழ்தகவு ஆகியவற்றுக்கான அடிப்படைகளைக் கண்டறிந்த முக்கியமானவர்களுள் ஒருவர் ஆவார்.
கணிதம், மருத்துவம், உயிரியல், இயற்பியல், வேதியியல், ஜோதிடம் வானியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.
பதவிகள்:-
பவியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
நூல்கள்:-
‘தி பிராக்டிஸ் ஆஃப் அரித்மாடிக்’ மற்றும் ‘சிம்பிள் மென்சுரேஷன்’ என்ற இவரது இரண்டு நூல்கள் வெளியாகின.
நிகழ்தகவு குறித்த ‘லீபர் டெ லூடோ அலியே’ என்ற நூலை 1560-ல் எழுதினார். இது இவரது மரணத்துக்குப் பிறகு வெளியானது. இதுதான் நிகழ்தகவு குறித்து சீராக எழுதப்பட்ட முதல் நூல்.
‘இம்மார்டலிடேட்’, ‘ஆர்டிஸ் மாக்னியே’, ‘சிவே டி ரெகுலிஸ் அல்ஜீபிராசிஸ்’, ‘லிப்ரிஸ் ப்ரோபிரிஸ்’, ‘நெரோனிஸ் என்கோமியம்’, ‘மெத்தோடோ மெடின்டி’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
இயற்கணிதத்தைச் சார்ந்த முப்படியச் சமன்பாட்டுக்கு முதன் முதலாக இயற்கணிதத் தீர்வை வழங்கினார். அறிவியலிலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இயற்கை அறிவியலின் கலைக்களஞ்சியம் என்ற பெயரில் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
மறைவு:-
19 ஆம், 20ஆம் நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளம் அமைத்த இவர்,1576 ஆம் ஆண்டு, செப்டம்பர்-21 ஆம் நாள் மரணமடைந்தார்.
செப்டம்பர்-24. இயற்கணிதத்தைச்சார்ந்த முப்படியச் சமன்பாட்டிற்கு, இயற்கணிதத் தீர்வு வழங்கியவர்- ஜெரோலாமோ கார்டானோ (Gerolamo Cardano) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
21:57
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
21:57
Rating: 5


No comments: