Breaking

செப்டம்பர்-25. π ஒரு பகாஎண் என முதலில் நிறுவியவர், பீர்-இலாம்பர்ட் விதி உருவாக்கிய சுவிட்சர்லாந்து-செருமானிய கணிதவியலாளர், வானியலாளர், மற்றும் இயற்பியலாளர்- யொகான் என்றிக் லாம்பர்ட் (Johann Heinrich Lambert) மறைந்த தினம்.

இன்று நினைவு நாள்:- செப்டம்பர்-25.



π ஒரு பகாஎண் என முதலில் நிறுவியவர்,
பீர்-இலாம்பர்ட் விதி உருவாக்கிய 
சுவிட்சர்லாந்து-செருமானிய கணிதவியலாளர், வானியலாளர், மற்றும் இயற்பியலாளர்-
யொகான் என்றிக் லாம்பர்ட் (Johann Heinrich Lambert)
மறைந்த தினம்.

பிறப்பு:-

ஆகஸ்ட்- 26, 1728 ஆம் ஆண்டு
மல்ஹவுசு, பிரான்சில் பிறந்தார்.
ஆரம்பக் கல்வி பயின்றார்.பிறகு
12 வயதில் பள்ளியை விட்டு வெளியேறி, தனது ஓய்வு நேரங்களில் படித்தும்,  தொடர்ச்சியாக வேலைகளையும் மேற்கொண்டார். 
பிறகு ஐரோப்பா பயணம் செய்தார் (1756-1758) ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய   கணிதவியலாளர்களை சந்திக்க அனுமதி பெற்றார். 


யூக்ளீடற்ற வடிவியல்:-

லாம்பர்ட் யூக்ளீடற்ற வெளியில் பல யூகமுடிவுகளை முன் மொழிந்தார். 
யூக்ளீட் வடிவியலின் அடிப்படைகளில் முக்கியமான 
இணை அடிகோளை மற்ற அடிகோள்களிலிருந்து நிறுவ முயன்று சரித்திரம் படைத்த பல்வேறு கணித வியலர்களில் அவரும் ஒருவர். 

இணை அடிகோளை மறுத்தால் முக்கோணத்தின் மூன்று
கோணங்களின் அளவைத்தொகை 180 டிகிரி ஆக இருக்காது. 

லாம்பர்ட் அந்தத்தொகை 180 டிகிரி விடக்குறைவாக இருப்பதாக வைத்துக் கொண்டால் ஏதாவது முரண்பாடு ஏற்படுகிறதா என்று பார்த்தார். மேலும் மேலும் புதுத்தேற்றங்கள் உருவானதே தவிர முரண்பாடு ஏதும் ஏற்படவில்லை.
ஒன்றும் ஏற்பட வாய்ப்பில்லை என்று இன்று நமக்குத் தெரியும். ஏனென்றால் யூக்ளீடற்ற வடிவியலும் முரண்பாடற்றதுதான். 
அவருடைய ஒரு தேற்றப்படி அந்தத் தொகையின் குறைவு முக்கோணத்தின் பரப்புக்கு விகிதசமமாக இருக்கும். மிகைவளைய முக்கோணங்களில் கோணங்களுக்கும் பரப்புக்கும் உள்ள உறவுகளுக்கு ஒரு வாய்பாடு உண்டாக்கினார்.

லாம்பர்ட் தான் முதன் முதலில் முக்கோணவியலில் மிகைவளையச் சார்பு களை அறிமுகப்படுத்தியவர். 

பை:-

1768 இல் லாம்பர்ட் பை ஒரு விகிதமுறா எண் என்று நிறுவிக்காட்டினார். 

 

நூல்கள்:-

ஊரு திரும்பியதும் அவர் தனது முதல் புத்தகங்கள் (ஒளியியல் மற்றும் அண்டவியல் பற்றிய) வெளியிட்டார்.


இறப்பு:-

செப்டம்பர்-25, 1777 ஆம் ஆண்டு
பெர்லின், புருசியாவில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.