Breaking

நவம்பர்-28. உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய இத்தாலிய இயற்பியல் அறிஞர்-என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi) மறைந்த தினம்.


இன்று பிறந்த நாள்:- செப்டம்பர்-29.

உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய இத்தாலிய இயற்பியல் அறிஞர்-என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi)
பிறந்த தினம்.

பிறப்பு:-

என்ரிகோ பெர்மி 1901 ஆம் ஆண்டு செப்டம்பர்-29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில் பிறந்தார்.
சிறு வயதிலேயே இயற்பியலில்
மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21 ஆம் வயதில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக்கொள்கையைத் தோற்றுவித்தார்.

ஆராய்ச்சிகள்:-

எலக்ட்ரான் அணுக்களின் ஓட்டம் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை நிறமாலையாய்ப் பிரிவது பற்றியும் ஃபெர்மி ஆரம்ப ஆய்வினை மேற்கொண்டார். ஓர் அணுவின் வெளி வட்டப் பாதையில் சுழலும் எலக்ட்ரானில் ஆரம்பித்த ஃபெர்மி தனது ஆய்வினை முன்னேற்றி மையக் கருவான அணுக்கருவுக்கே சென்றார்.  மேலும் அணுக்கருவைப் பிளக்க முடியும் என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயற்பியலார் ச்ட்ரஷ்மேன் கூறினார். இதைப் படித்த ஃபெர்மி தூண்டல் கதிரியக்கம் (Chain Reaction) நடைபெறுவதைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினார். தனது 22 ஆவது வயதில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் அணுசக்தியின் ரகசியம் இருப்பதைச் சொன்னர் ஃபெர்மி. அணு உலைகளில்
பயன்படுத்தப்படும் வேகமற்ற நியூட்ரான் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

முதல் அணுக்கரு உலை:-

மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ஃபெர்மி, ஹான்ஃபோர்ட் அணுக்கரு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு ஆற்றினார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942இல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். மேலும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். 

விருதுகள்:-

1926 ஆம் ஆண்டில் மேட்டியூக்சி பதக்கம், 
ஃபெர்மி தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938 ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1942 இல் இயூசு பதக்கம், 1947 ஆம் ஆண்டில் ஃபிராங்க்லின் பதக்கம் மற்றும் 1953 இல் ரம்ஃபோர்ட் பரிசு, 
1950 ஆம் ஆண்டு இராயல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரின் அறிவியல் திறமையைப் பாராட்டி பெனிட்டோ முசோலினி, உலக அளவில் இயங்கும் மிக உயரிய விருதான 'அறிவியல் வித்தகர்' என பொருள்படும் "எக்சலென்சா" என்னும் விருதினை அளித்து பாராட்டினார்.

மறைவு:-

நவம்பர்-28, 1954 ஆம் ஆண்டு
சிக்காகோ, இலினோய், அமெரிக்காவில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக ஃபெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.

நினைவுச்சின்னம்:-

முக்கியத்துவம் மிக்க பிரமுகர்கள் பட்டியலில் பெர்மியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்காக இத்தாலிய பேரிடர் ஆலயங்களாக அறியப்படும் சாண்டா குரோசின் பசிலிக்காவில் அமைக்கப்பட்டுள்ள தகடு பெர்மிக்கு ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது.

பெயர்களில் என்ரிக்கோ பெர்மி:-

பெர்மி ஆய்வகத் துகள் முடுக்கி, 
 பெர்மி காமா-கதிர் விண்வெளித் தொலைக்கியும்- 2008, அர்கெந்தினாவில் ஆர்.ஏ-1 என்ரிகோ பெர்மி அணு ஆராய்ச்சி உலை என்று பெயர் சூட்டி பெறுமைபடுதியது.

No comments:

Powered by Blogger.