Home
SEPTEMBER
செப்டம்பர்-29. டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர்- கிரிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர், (Christian Andreas Doppler) பிறந்த தினம்.
செப்டம்பர்-29. டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர்- கிரிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர், (Christian Andreas Doppler) பிறந்த தினம்.
06:13
Read
இன்று பிறந்த நாள்:- செப்டம்பர்-29.
டாப்ளர் விளைவைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர்-
கிரிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர்,
(Christian Andreas Doppler)
பிறந்த தினம்.
பிறப்பு:-
நவம்பர்-29, 1803 ஆம் ஆண்டு,
சால்ஸ்புர்க், ஆஸ்திரியாவில் பிறந்தார்.
தனது உயர்கல்வியை முடித்ததும் வியன்னா மற்றும் சல்ஸ்பெர்கில் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்று முடித்தார். பிறகு செக் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.1848 இல் வியன்னா பல்கலைகழகத்தில் இயற்பியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார்.
கண்டுபிடிப்புகள்:-
டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார். 1842 ஆம் ஆண்டு இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வின் மூலம் டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்தார்.
ஒலிமூலம் இயக்கத்தில் உள்ளபோது, அது உருவாக்கும் ஒலியின் சுருதியில் தோற்ற மாற்றம் ஏற்படும் என்ற கருத்தினை வெளியிட்டார். இவரது இக்கருத்து திசைவேகம் மற்றும் பொருட்களின் தொலைவு கண்டறியும் முறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது.
ஒலி மூலத்திற்கும் கேட்குநருக்கும் இடையில் ஒரு சார்பியக்கம் உள்ள பொது ஒலிகள் அதிர்வெண்ணில் தோற்ற மாற்றம் எற்படும் நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.
டாப்ளர் விளைவு பயன்பாடுகள்:-
RADAR-(Radio Detection And Ranging) - டாப்ளர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திசைவேகம் கண்டறியப்படுகிறது.
போக்குவரத்து கட்டுப்பாட்டு வாகனத்திலிருந்து, வேகமாக செல்லும் வாகனத்தை நோக்கி மைக்ரோ அலைகள் அனுப்பப்படுகின்றன. இயங்கும் வாகனத்திலிருந்து எதிரொலிப்பு அலைகள் கட்டுப்பாட்டு வாகனத்திலுள்ள பகுப்பான் உதவியினால் உணரப்படுகின்றது அதிர்வெண்ணில் ஏற்படும் இடப்பெயர்ச்சியின் மூலம் வாகனத்தின் வேகம் கணக்கிடப்படுகிறது.
வானூர்தி நிலையத்தில் உள்ள ரேடாரின் மூலம் பெறப்படுகின்ற டாப்ளர் இடப்பெயர்ச்சியின் உதவியுடன்
வானூர்தி உயரம், வேகம், நெருங்கும் வானூர்தியின் தொலைவு போன்றவை கணக்கிடப்படுகின்றன.
மருத்துவ படமெடுத்தல் மற்றும் இரத்த ஓட்ட அளவீடு:-
இரத்த ஓட்டத்தின் திசைவேக அளவிடல்கள், மகப்பேறியல் மீயொலி வரைவு மற்றும் நரம்பியல் போன்ற மருத்துவ மீயொலி வரைவு துறைகளிலும் பயன்படுகின்றன. தமனிகள் மற்றும் சிரைகள் ஆகியவற்றில் டாப்ளர் விளைவு அடிப்படையிலான இரத்த ஓட்டத்தின் திசைவேக அளவிடலானது குறுக்கம் போன்ற இரத்தநாளம் சம்மந்தமான சிக்கல்களை அறுதியிடுவதற்கான வலிமையான கருவியாக உள்ளது.
மேலும் சைரன்கள்,வானியல்,வெப்பநிலை அளவீடு,ஓட்ட அளவிடல்,திசைவேக விவர அளவீடு,நீருக்கடியிலான ஒலியியல்,ஆடியோ,அதிர்வு அளவிடல் போன்றவற்றிலும் பயன்படுகிறது.
இறப்பு:-
மார்ச்-17, 1853 ஆம் ஆண்டு
வெனிசு, இத்தாலியில் மரணமடைந்தார்.
செப்டம்பர்-29. டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர்- கிரிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர், (Christian Andreas Doppler) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
06:13
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
06:13
Rating: 5
Tags :
SEPTEMBER


No comments: