Breaking

செப்டம்பர்-28. உலக ரேபிஸ் தினம்:-


இன்று சிறப்பு நாள்:- செப்டம்பர்-28.
உலக ரேபிஸ் தினம்:- 

ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. 

ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் இந்த நோய் வரலாம். 

நம் உடலில் சிறுகீறல் இருந்து அதில் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் வைரஸ் தாக்கும்.

நாய்கள் மூலமே அதிகளவில் ரேபிஸ் பரவுகிறது. 

மேலும், ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885 ஆம் ஆண்டு லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். 
எனவே லூயிஸ் பாஸ்டர் இறந்த தினமான செப்டம்பர் 28ஐ, ’Global Alliance for Rabies Control’ என்ற தன்னார்வ அமைப்பு, ரேபிஸ் வைரஸ் நோய் குறித்து மக்களிடையே 
விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து, 'உலக ரேபிஸ் தினமாக' அனுசரிக்க வலியுறுத்தியது. 2015 முதல், ரேபிஸ் தினத்தை,
 'ஜீரோ பை 30' என்ற தலைப்பில் கொண்டாடுகின்றனர். 

அறிகுறிகள்:-

பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். ‘கோமா’ நிலைக்கு வந்து இறப்பு ஏற்படும்.

முதலுதவி:-

வெறிநாய்க் கடி பட்டவர் உடனடியாக அவ்விடத்தை சோப்புப் போட்டு சுத்தமான நீரால் கழுவி விட்டு மருத்துவச் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். 

அரசு மருத்துவ மனைகளில் போதுமான அளவு வெறிநாய்க்கடி மருந்தை வைத்திருக்க வேண்டும். 

பயம் தேவையில்லை:-

முன்பு போல் தொப்புளைச் சுற்றி தினமும் ஊசி போடும் முறை இப்போது இல்லை.

No comments:

Powered by Blogger.