செப்டம்பர்: 29. உலக இருதய தினம். ( World Heart Day)
05:33
Read
இன்று சிறப்பு நாள்:-செப்டம்பர்: 29.
உலக இருதய தினம்.
( World Heart Day)
இதய நோய்களிலிருந்து காத்துக்கொள்ளவும், அவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதய நோய்கள் தாக்காத வகையில் தற்காப்பு நடவடிக்கைகளையும், ஒழுங்கான வாழ்வியல் முறைகளையும் கடைபிடித்தாலே இதய நோய்கள் நம்மை நெருங்காது. இன்றைய நாளில் இதய நோய்கள் குறித்த அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
இருதய நோய்கள் என்றால் என்ன?
நமது இதயத்துக்குள் இருக்கும் வால்வுகள் தான் இதயத்தை நன்றாக செயல்பட வைக்கின்றன. இதயத்தின் மேல் பகுதியான ஏட்ரியத்தில் இருந்து கீழ்ப்பகுதியான வெண்ட்ரிக்கிளுக்கு ரத்தத்தை அனுப்பும் போது, மைட்ரல் என்கிற வால்வு சுமார் 3.5 சதுர செ.மீ. முதல் 5 செ.மீ. வரை திறக்க வேண்டும். ஆனால் சிலருக்கு இது ஒரு சதுர செ.மீ. கூட திறக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும். இதைத் தான் இதய நோய் என்கிறோம்
இதயத்தில் ரத்த திட்டுகள் இருத்தல், ரத்த நாளங்களில் கோளாறு, இதய வடிவமைப்பில் பிரச்சனைகள், பக்கவாதம், பிறவியிலிருந்து இருக்கும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், இதய தமனி நோய், இதய அடைப்பு நோய் உள்ளிட்ட அனைத்துமே இருதய நோய்களில் அடங்கும்.
ஒழுங்கற்ற வாழ்வியல் முறைகள், உடல் பருமன், புகைபிடித்தல், அளவுக்கதிகமான குளுக்கோஸ், தீய கொழுப்புகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுகின்றன.
இதயத்தை காக்கும் வழிமுறைகள்:-
உங்கள் இதயத்தை அறிந்துகொள்ளுங்கள்:-
சீரான கால அளவில் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்தல் மூலம் இதய நோய்களிலிருந்து முன்கூட்டியே தப்பித்துக் கொள்ளலாம்.
இதயத்திற்கு சரியான உணவை அளியுங்கள்:
ஒமேகா-3 சத்துள்ள மீன், நட்ஸ், பெர்ரி பழங்கள், ஓட்ஸ், லெக்யூம்ஸ், போன்ற
உணவுப்பொருட்களை உண்ணலாம்.
இதயத்தை ஆக்டிவாக வைத்திருங்கள்:
வியர்வை வரும் வரை உடற்பயிற்சி செய்தல் மற்றும் யோகா செய்தல்
உங்கள் இதயத்தை நேசியுங்கள்:
துரித உணவுகள், ஒழுங்கற்ற வேலை நேரம் இவற்றை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவை உண்பது, புகை பிடித்தலை தவிர்ப்பது, மது பழக்கத்தை நிறுத்துவது உள்ளிட்டவற்றால் இதயம் நன்றாக செயல்படும். எனவே நாம் இதயத்தை நேசிப்போம்.
செப்டம்பர்: 29. உலக இருதய தினம். ( World Heart Day)
Reviewed by JAYASEELAN.K
on
05:33
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
05:33
Rating: 5
Tags :
Special Day


No comments: