Breaking

செப்டம்பர்-30. அமெரிக்க இயற்பியலாளர், நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகு கண்டறிந்தவர்- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர்(Charles Francis Richter) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:-செப்டம்பர்-30.

அமெரிக்க இயற்பியலாளர், நிலநடுக்க ரிக்டர் அளவீடு அலகு கண்டறிந்தவர்-
சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர்(Charles Francis Richter) மறைந்த தினம்.

பிறப்பு:-

சார்லஸ் ரிக்டர் அமெரிக்காவில் வடக்கு சின்சினாட்டி பகுதியில் ஓகியோ மாவட்டத்தில் ஹேமில்டன் என்ற ஊரில் 1900, ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார்.
தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தோடு இணைந்த தொடக்கப்பள்ளியில்  இளவயதுக் கல்வியும், பள்ளிக்கல்வி முடிந்ததும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 
வானவியலில் ஆர்வம் கொண்டிருந்த ரிக்டர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியலை படித்து,1920-ல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்றார்.
கலிபோர்னியா தொழில் நுட்பப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

கியூ வாடட்டி (Kiyoo Wadati) என்பவரின் ஆலோசனைப்படி நில நடுக்க அலைகளை உருவாக்கும் புவியின் இடப்பெயர்ச்சியைத் தொடர்ந்து அளக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது பைனோ கூட்டன்பர்க், சார்லஸ் ரிக்டர் இருவரும் அங்கு சென்று இணைந்து செயல்பட்டு நில நடுக்க வரைவுமானி (Seismograph) ஒன்றை உருவாக்கினர். அதனுடைய தீவிரத்தை(Intensity) அளப்பதற்கு மடக்கை அலகு(Logarthimic Scale) ஒன்றைப் பயன்படுத்தினார். பிறகு இவரது பெயர் சூட்டப்பட்டது.

ரிக்டர் அளவு (Richter magnitude scale):-

நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும். 
அமெரிக்கநிலஅதிர்வுவியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார்.
இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். 
இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். 
நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். 

மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ நிலநடுக்கம்எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 

6.0 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. 

ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

 நூல்கள்:-

1941-ல் இவர் கூட்டன்பர்க்குடன் இணைந்து ‘புவியின் நிலநடுக்கம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டனர். 1954-ல் இந்நூல் மீண்டும் பதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

1958-ல் ‘அடிப்படை நிலநடுக்கவியல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். 

சிறப்புகள்:-

1959-1960 இல் ஜப்பான் சென்றார் புல்பிரைட் விருது அறிஞராக(Fulbright Scholar) அங்கு சென்று, நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழக்கூடிய பகுதிகளில் கட்டடங்களை எப்படி அமைப்பது என்பதற்கான கட்டடப் பொறியியல் வழிமுறைகளைக் கொண்ட நிலநடுக்கப் பொறியியல் என்ற பாடத்திட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கினை மேற்கொண்டார். 

அமெரிக்க கலை அறிவியல்கழக உறுப்பினர், அமெரிக்க நில நடுக்க ஆய்வுக் கழகத்தின் தலைவர் என்ற பொறுப்புகளை வகித்தார். 

மறைவு:-

1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் தனது 85 ஆம் வயதில் கலிபோர்னியாவில் உள்ள பாசடேனா என்ற ஊரில் இவர் மாரடைப்பால் காலமானார்.

No comments:

Powered by Blogger.