Breaking

செப்டம்பர்-30. கனடாவைச் சேர்ந்த நோய்த்தடுப்பாற்றல் மருத்துவரும்,உயிரியலாளருமான- ரால்ஃப் ஸ்டைன்மன் (Ralph Marvin Steinman) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- செப்டம்பர்-30.

கனடாவைச் சேர்ந்த நோய்த்தடுப்பாற்றல் 
மருத்துவரும்,உயிரியலாளருமான- ரால்ஃப் ஸ்டைன்மன் 
(Ralph Marvin Steinman) மறைந்த தினம்.

பிறப்பு:-

ஜனவரி-14, 1943 ஆம் ஆண்டு
மொண்ட்றியால், கனடாவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வி பயின்ற பிறகு மெக்கில் பல்கலைக்கழகம்,
ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்றவற்றில் பட்டங்கள் பெற்றார். பிறகு நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.

கண்டுபிடிப்புகள்:-

இவர், 1973 ஆம் ஆண்டில் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுப் போது,
கிளைவடிவ உயிரணு
(dendritic cells) கண்டுபிடித்தார். மேலும் புதிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள்.

நோபல் பரிசு:-

இவருக்கும் அமெரிக்காவின் புரூஸ் பொய்ட்லர், சூல்ஸ் ஹொஃப்மன் ஆகியோருக்கும் 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

மறைவு:-

இவருக்கான நோபல் பரிசு 2011 அக்டோபர் 3 திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அவர் மூன்று நாட்களுக்கு முன்னர், செப்டம்பர்-30, 2011 ஆம் ஆண்டு, மன்ஹாட்டன், நியூயார்க்கில் மரணமடைந்தார்.
மேலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில், அவர் உயிரோடு உள்ளார் என்ற நம்பிக்கையிலேயே பரிசு அறிவிக்கப்பட்டது, என பரிசுக் குழு தெரிவித்தது. இதனால், அறிவிக்கப்பட்ட பரிசை மீளப் பெறுவதில்லை என நோபல் பரிசுக் குழு தீர்மானித்தது. மொத்த நோபல் பரிசுத் தொகையின் சம பாதி இவருக்கும், மீதமான பகுதி மற்றைய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பபட்டது.

No comments:

Powered by Blogger.