Breaking

பூச்சிகளின் ஒளி உமிழும் தன்மைக்கு காரணம் லூசிஃபரேஸ் நொதி, பற்றி அறிவோமா..


அழகான நட்சத்திரம் மாதிரி மின்னுதே...⭐⭐⭐ அதெல்லாம் என்னன்னு தெரியுதா... 
           
இவைகள் அனைத்தும் "புழுவும், அதோட வலையும்"... 

          பூஞ்சைகளை உணவாக உண்ணும் ஒரு வகை 'ஈ'யின் லார்வாக்கள் தான் இந்த புழுக்கள்... 

       இந்த புழுவானது ..... நம்ம சிலந்தி போல ... ஆனால் அதை விட வலுவான வலைகளை ஒரு அடி நீளத்துக்கு பின்னும்...

       அதிலிருந்து இரண்டிலிருந்து.. மூன்றடி நீளம் வரை ...நூல் நூலா  20- 30 இழைகளை நம்ம வாசப்படி தோரணம் மாதிரி தொங்க விடும் ... அதுவும் சும்மா இல்லை... இந்த இழைகள் முழுக்க துளித்துளியா பளபளன்னு பசை மாதிரி இது உடலில் சுரக்கும் ஒரு திரவத்தை விட்டிருக்கும்...

 இந்த திரவம் சுற்றி உள்ள குகையின் ஈரப்பதத்தை உறிஞ்சி ...நல்லா பெருசாகி... கண்ணாடி போல ... இந்த புழு ஒளிரும் போது எல்லாம் ... சேர்ந்து பிரதிபலிச்சு மின்னும்... 

     அப்போது சிறிய பூச்சிகள் போன்றவற்றை  பிடித்து உணவாக சாப்பிடும்.

இந்த குகைகள் ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து நாடுகளில் இருக்கும்... வளர்ந்து ஈயாக மாறும் போது ஆண் பூச்சிகள் ஒளி உமிழும் தன்மை இழந்துடும், இதன் ஒளி உமிழும் தன்மைக்கு காரணம் இதன் வயிற்றில் சுரக்கும் லூசிஃபரேஸ் நொதி..

No comments:

Powered by Blogger.