Home
NOVEMBER
நவம்பர்-01. நிலைத்த நிலைப்புக் கோட்பாடு, ஒட்டுமணி விவாதம், போண்டி அகந்திரளல்போண்டி k-கலனம் கண்டுபிடித்த கணிதவியலாளர்-சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) பிறந்த தினம்.
நவம்பர்-01. நிலைத்த நிலைப்புக் கோட்பாடு, ஒட்டுமணி விவாதம், போண்டி அகந்திரளல்போண்டி k-கலனம் கண்டுபிடித்த கணிதவியலாளர்-சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) பிறந்த தினம்.
04:39
Read
இன்று பிறந்த நாள்:- நவம்பர்-01.
நிலைத்த நிலைப்புக் கோட்பாடு, ஒட்டுமணி விவாதம், போண்டி அகந்திரளல்போண்டி k-கலனம் கண்டுபிடித்த கணிதவியலாளர்-சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) பிறந்த தினம்.
பிறப்பு:-
நவம்பர்- 01, 1919 ஆம் ஆண்டு
வியன்னா, ஆஸ்திரியாவில் பிறந்தார். இங்கேயே பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் கணிதம் பயில ஆர்வமாக இருந்தார்.
பணிகள்:-
போண்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945 முதல் 1954 வரை கணிதவியல் விரிவுரையாளராகப் பணியாற்ரினார்.
டிரினிடியின் ஆய்வுறுப்பினராக 1943-49, 1952-54 ஆகிய ஆண்டுகளில் இருந்தார்.
ஆராய்ச்சிகள்:-
1948 இல் பிரெடு ஆயில், தாமசு கோல்டு ஆகியோருடன் இணைந்து அண்டத்தின் நிலைத்தநிலைக் கோட்பாட்டை உருவாக்கினார். இக்கோட்பாட்டை தொடர்ந்து விரிவடையும் அதேநேரத்தில் புதிய விண்மீன்களையும் பால்வெளிகளையும் உருவாக்க தொடர்ந்து நிலையான அடர்த்தியைப் பேண, பொருண்மமும் உருவாகிறது என்றார். அண்மையில் பெருவெடிப்புக் கோட்பாட்டின்படியான அண்ட நுண்ணலைக் கதிர்வீச்சுப் பின்னணி கண்டுபிடிக்கப்பட்டதால் இக்கோட்பாடு சற்றே பின்வாங்கியுள்ளது.
ஈர்ப்புக் கதிர்வீச்சின் தன்மையைச் சரியாக உணர்ந்தவர்களில் போண்டியும் ஒருவராவார். இவர் போண்டி கதிர்வீச்சு ஆயங்களையும் போண்டி K கலனத்தையும் போண்டி பொருண்மை விளக்கங்களையும்போண்டி செய்தியையும் அறிமுகப்படுத்தினார்.
இவர் போண்டி விவாதத்தை மக்களிடையே பரப்பினார். இதன்படி, பொது சார்பியல் கோட்பாடு பொருள்பொதிந்த புறநிலையாக நிலவும் ஈர்ப்புக் கதிர்வீச்சை முன்கணித்தது.
1947 ஆய்வுக் கட்டுறை இலெமைத்ரே-டோல்மன் பதின்வெளியில் ஆர்வத்தைப் புத்துயிர்ப்புறச் செய்தது. இது இலெமைத்ரே-டோல்மந்போண்டி பதின்வெளி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வெளி ஒருபடித்தற்ற கோலச் சீரொருமை வாய்ந்த்தூசுத் தீர்வாகும். போண்டி மேலும் வளிம முகிலில் இருந்து விண்மீன் அல்லது கருந்துளை உருவாகும் அகந்திரளுதல் கோட்பாட்டிற்கும்
இரேம்மண்டு இலிட்டில்டனுடன் இணைந்து பங்களிப்பு செய்துள்ளார்.
இதற்கு போண்டி அகந்திரளுதல் கோட்பாடு அல்லது போண்டி ஆரக் கோட்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
பதவிகள்:-
1954 இல் இலண்டன் கிங்சு கல்லூரியில் பேராசிரியரானார்.
1985 இல் தகைமைப் பேராசிரியராகவும் அழைக்கப்பட்டார்.
1956 முதல் 1964 வரை அரசு வானியல் கழகத்தின் செயலராக பதவி வகித்தார்.
விருதுகள்:-
ராயல் சொசைட்டி உறுப்பினர்,
பாத் ஆணை விருது பெற்றார்.
இறப்பு:-
சார்பியல் குறித்துப் பல மீள்பார்வைக் கட்டுரைகளை எழுதிய இவர், செப்டம்பர் -10, 2005 ஆம் ஆண்டு,
கேம்பிரிட்ச், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
நவம்பர்-01. நிலைத்த நிலைப்புக் கோட்பாடு, ஒட்டுமணி விவாதம், போண்டி அகந்திரளல்போண்டி k-கலனம் கண்டுபிடித்த கணிதவியலாளர்-சர் எர்மன் போண்டி (Sir Hermann Bondi) பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
04:39
Rating: 5
Tags :
NOVEMBER
No comments: