Breaking

2050-ஆம் ஆண்டில் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் மூழ்கும் அபாயம்- அமெரிக்க ஆய்வறிக்கை..


2050-ஆம் ஆண்டில் சென்னை, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் மூழ்கும் அபாயம்- அமெரிக்க ஆய்வறிக்கை..


அமெரிக்காவை சேர்ந்த கிளைமேட் சென்ட்ரல் என்ற நிறுவனம் இது குறித்த ஆய்வை நடத்தியுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறுகையில் இந்தியாவில் 7500 கி.மீ. தூரத்துக்கு கடலோர பகுதி உள்ளது. 

சீனாவுக்கு பிறகு கடல் மட்ட உயர்வால் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.


ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கடலோர பகுதிகளில் வாழும் 31 மில்லியன் மக்கள் வெள்ளப்பெருக்கால் பல்வேறு ஆபத்துகளை சந்திக்கின்றனர்.

 2050 ஆம் ஆண்டு இந்த ஆபத்தால் 35 மில்லியன் மக்களும் 2100 ஆண்டில் 51 மில்லியன் மக்களும் பாதிக்கப்படுவர்.

தற்போது உலகம் முழுவதும் 250 மில்லியன் மக்கள் கடலோர பகுதிகளில் வசித்து வருகின்றனர். உலகமெங்கும் கடல் மட்டம் 11- 16 செ.மீ. வரை உயர்கிறது.

கார்பன் வெளியேற்றத்தை உலகம் முழுவதும் வெகுவாக குறைத்துவிட்டாலும் 2050 ஆம் ஆண்டில் அரை மீட்டர் அளவுக்காவது உயரும். 

தாழ்வான பகுதியில் 70 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் சீனா, இந்தியா, வங்கதேசம், வியட்னாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பின்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த நாட்டினருக்கு ஆபத்து உள்ளது. 

கார்பன் வெளியேற்றத்தால் உலக வெப்பநிலை உயர்ந்து பனிக்கட்டிகள் உருகும் அபாயம் ஏற்படும்.


2050ஆம் ஆண்டுக்குள் கடல் மட்ட உயர்வால் உலக அளவில் நில பகுதியில் வசிக்கும் 30 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இது போல் 2100-இல் நிலத்தில் வசிக்கும் 20 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்குவர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மும்பை

பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஒடிஸா, குஜராத்தின் கடலோர மாவட்டங்கள், கேரளத்தின் கொச்சி உள்ளிட்ட இடங்களில் கடல்நீர் மட்டம் உயரும். இதில் சென்னை தான் அபாயகரமான பகுதியில் இருக்கிறது. எனவே கார்பன் உமிழ்வதை குறைத்துக் கொண்டால் ஆபத்து குறைய வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Powered by Blogger.