Breaking

அக்டோபர்-14. அமெரிக்க உயிரி தொழில்நுட்பவியலாளர், உயிர் வேதியியலாளர்-கிரைக் வெண்டர்(John Craig Venter) பிறந்த தினம்.


இன்று பிறந்தநாள்:- அக்டோபர்-14.

அமெரிக்க உயிரி தொழில்நுட்பவியலாளர், உயிர் வேதியியலாளர்-கிரைக் வெண்டர்(John Craig Venter) 
பிறந்த தினம்.


பிறப்பு:-

அக்டோபர் -14, 1946 ஆம் ஆண்டு
சால்ட் லேக் சிட்டி, உட்டாவில் பிறந்தார். இவர் 1972 ஆம் ஆண்டு ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் உயிர்வேதியலில் இளங்கலை பட்டமும், 1975 ஆம் ஆண்டு கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில், உடற்செயலியல் மற்றும் மருந்தியலில் முனைவர் பட்டமும் பேற்றார். 

பணிகள்:-

இவர் பிற்காலத்தில் நீயூ யார்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பின்பு நேசனல் இன்சிடிடியூட் ஒஃப் எல்த் (NIH - National Institute of Health) என்னும் நிறுவனத்தில் இணைந்துப் பணியாற்றிவருகிறார்.


ஆராய்ச்சிகள்:-

இவர் மனித மரபணுத் தொடரை 
(the human genome)
முதலிற் சோதித்தவர்களில் குறிப்பிடத்தக்கவராவார்.

செயற்கை உயிர் மற்றும் மரபணு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்கவரும் ஆவார். 

இவர் செயற்கை கல உருவாக்கத்திலும் மற்றும் கடலும் கடல் சார்ந்தப் பகுதிகளில் உயிர் மற்றும் மரபணு பரவியிருத்தலிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 

நூல்கள்:-

A Life Decoded,

Life at the Speed of Light.

சிறப்புகள்:-

இவர் 2007 மற்றும் 2008ல் டைம் செய்தித்தாள் (Time Magazine) வெளியிட்ட உலகின் நூறு ஆளுமைமிக்க ஆட்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டவர்.

இது மட்டுமல்லாது, பிரித்தானிய இதழான நியூ ச்டேச்மேன் (New Statesman) வெளியிட்ட உலகின் 50 ஆளுமை மிக்க ஆட்களில் பதினான்காம் இடத்தை பிடித்திருந்தார். 

இவரின் மரபணு முழுவதும் தொடரறியப்பட்டு, 2007 ம் ஆண்டு சேம் லெவி என்னும் அறிவியலாளரால் தலைமை வகிக்கப்பட்ட குழுவால் வெளியிடப்பட்டது.

No comments:

Powered by Blogger.